புதிய ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ அறிமுகம்

ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ காரின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்துள்ளது. பிரிமியம் தோற்றத்தை வழங்கும் வகையில் பஸாத் காரினை போன்ற முகப்பினை வழங்கி உள்ளனர்.

ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ

ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ கார் கடந்த 8 மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்த நிலையில் மீண்டும் வென்ட்டோ காரின் மேம்படுத்தபட்ட மாடல் உட்புறம் மற்றும் வெளிதோற்றத்தில் மட்டும் மாற்றங்களை பெற்றுள்ளது.

3 குரோம் ஸ்லாட்களுக்கு மத்தியில் ஃபோக்ஸ்வாகன் இலச்சினை பதிக்கப்பட்டுள்ளது. புதிய பனி விளக்குகளுடன் கூடிய கார்னரிங் விளக்குகளை கொண்டுள்ளது.

பின்புற டெயில் விளக்குகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.  பம்பரில் குரோம் பட்டை பதிக்கப்பட்டுள்ளது. மேலும் கதவு கைப்பிடிகளில் குரோம் பூச்சு தரப்பட்டுள்ளது.

உட்புறத்தில் வண்ணங்கள் புதுப்பித்துள்ளனர் மேலும் டாப் வேரியண்டில் கரூஸ் கட்டுப்பாடு , புதிய குளோவ் பாக்ஸ் , தானாக மடங்கி கொள்ளும் பின்புறம் பார்க்கும் கண்ணாடி போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

புதிய ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ

வென்ட்டோ என்ஜினில் மாற்றங்கள் இல்லை . 1.2 லிட்டர் பெட்ரோல் , 1.6 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் மாற்றங்கள் இல்லை. 5வேக மெனுவல் மற்றும் 7வேக தானியங்கி கியர்பாக்சில் கிடைக்கும்.

மிக விரைவில் புதிய ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ விற்பனைக்கும் வரவுள்ளது.

2015 ஃபோக்ஸ்வாகன் வென்ட்டோ

2015 Volkswagen Vento facelift unveiled
image : autocarindia