புதிய ஆடி க்யூ7 எஸ்யூவி கார் – Car news in Tamil

புதிய ஆடி க்யூ7 காரின் படங்கள் மற்றும் முழுமையான நுட்ப விவரங்களை ஆடி வெளியிட்டுள்ளது. புதிய ஆடி க்யூ7 காரில் பல புதிய வசதிகளை கொண்டிருக்கும் க்யூ7 வரும் டெட்ராய்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வர உள்ளது.

2016 Audi Q7 Revealed

2015 ஆடி க்யூ7  போக்ஸ்வேகன் குழுமத்தின் எம்எல்பி பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது உள்ள மாடலை விட 325 கிலோ எடை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நீளம் மற்றும் அகலத்தினை குறைத்துள்ளது. எடை மற்றும் அளவுகளை குறைத்திருந்தாலும் கட்டமானத்தில் முன்பை விட உறுதியாகவும் உட்ப்புற இடவசதியும் மேம்படுத்தியுள்ளது.

இலகுவான அலுமினிய அடிசட்டத்தினை கொண்டு வடிவமைத்துள்ள காரணத்தால் அடிசட்டத்தில் மட்டும் 100கிலோ எடையை குறைத்துள்ளது. மேலும் சஸ்பென்ஷன் அமைப்பில் 71கிலோ மற்றும் கதவுகளில் 24 கிலோவினை குறைத்துள்ளது.

புதிய க்யூ7 காரில் நீளம் 5050மிமீ , அகலம் 1970மிமீ மற்றும் உயரம் 1740 ஆகும். மேலும் வீல்பேஸ் 2990மிமீ ஆகும். முந்தூய மாடலைவிட 37மிமீ நீளத்தையும், அகலம் 15 மிமீ குறைத்துள்ளனர். முந்தைய மாடலை போலவே 7 இருக்கைகள் கொண்டிருக்கின்றன முந்தை மாடலை விட இடவசதியை மேம்படுத்தியுள்ளனர்.

உட்ப்புற கட்டமைப்பினை முழுமையாக மாற்றியுள்ளது. பல்வேறு நவீன வசதிகளை புகுத்தியுள்ளனர். குறிப்பாக புதிய ஆடி எம்எம்ஐ தகவமைப்பு, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே , நவீன சவுன்ட் அமைப்பு போன்றவை கொண்டுள்ளது.

ஆடி க்யூ7 என்ஜின்

மொத்தம் 4 விதமான என்ஜினை கொன்டுள்ளது அவற்றில் இரண்டு பெட்ரோல் மற்றும் இரண்டு டீசல் எனஜின் ஆகும்.

பெட்ரோல் என்ஜின்;

1.  3.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 328பிஎச்பி ஆற்றலினை வெளிப்படுத்தும். இதன் டார்க் 440 என்எம் ஆகும்.

2. 2.0 லிட்டர் ட்ர்போ பெட்ரோல் என்ஜினில் 252பிஎச்பி ஆற்றல் கிடைக்கும். இதன் டார்க் 370என்எம் ஆகும்.

டீசல் என்ஜின்;

1.  3.0 லிட்டர் வி6  என்ஜின் 215பிஎச்பி ஆற்றலினை வெளிப்படுத்தும். இதன் டார்க் 600என்எம் ஆகும்.

2. 3.0 லிட்டர் (யூரோ-6) வி6  என்ஜின் 268பிஎச்பி ஆற்றலினை வெளிப்படுத்தும். இதன் டார்க் 700என்எம் ஆகும். மேலும் இந்த என்ஜினில் ஹைபிரிட் மாடலும் கிடைக்கும்.

எரிபொருள் சிக்கனம்

முந்தைய மாடலை விட எரிபொருள் சிக்கனத்தில் 26% சேமிக்கவல்லதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 2015 ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version