Automobile Tamilan

புதிய பிஎம்டபிள்யூ X6 ஜூலை 23 முதல்

2015 பிஎம்டபிள்யூ X6 எஸ்யுவி வரும் ஜூலை 23ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளனர். வரவிருக்கும் புதிய பிஎம்டபிள்யூ X6 எஸ்யுவி இரண்டாம் தலைமுறை மாடலாகும்.
பிஎம்டபிள்யூ X6 எஸ்யுவி
பிஎம்டபிள்யூ X6 எஸ்யுவி

முந்தைய தலைமுறை பிஎம்டபிள்யூ X6 காரை விட 40கிலோ வரை எடை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் காரின் முன் மற்றும் பின் பக்கத்திற்க்கு எடை அளவு 50;50 என சமமாக இருக்கும்.

இந்தியாவில் முழுமையாக கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்யப்படும் பிஎம்டபிள்யூ எக்ஸ்6 காரில் 313எச்பி ஆற்றலை வழங்கும் 6 சிலிண்டர் கொண்ட 3.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

xDrive40d வேரியண்ட் இந்தியாவிற்க்கு அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகின்றது. 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 5.8 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 240கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிஎம்டபிள்யூ X6 பெர்ஃபாமென்ஸ் மாடலான பிஎம்டபிள்யூ எக்ஸ்6 M எஸ்யுவி இந்த ஆண்டின் இறுதியில் வரலாம்.

2015 BMW X6 to launch in India on July 23 2015

Exit mobile version