Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதிய பைக்குகள் – 2016

by automobiletamilan
டிசம்பர் 28, 2015
in செய்திகள்

2016 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள புதிய பைக்குகள் பற்றி முக்கிய விபரங்களான , வருகை , விலை போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம். மிகவும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள பைக்குகள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளன.

TVS-Draken-concept

  1. டிவிஎஸ் அப்பாச்சி RTR 200

டிவிஎஸ் அப்பாச்சி சீரிஸ் வரிசையில் வரவுள்ள புதிய அப்பாச்சி RTR 200 பைக்கில் 200சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அப்பாச்சி RTR 200 பைக்கில் ஏபிஎஸ் ஆப்ஷனாலகவும் , மொபைல் சார்ஜிங் போர்ட் போன்ற வசதிகளை பெற்றிருக்கும்.

வருகை : பிப்ரவரி 2016

விலை : 1 லட்சம்

போட்டியாளர்கள் : ஏஸ் 200 , கேடிஎம் டியூக் 200

2. ஹீரோ HX250R

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் பிரிமிநம் பைக் மாடலாக வரவுள்ள ஹீரோ HX250R பைக்கில் 250சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடிய மாடலாக விளங்கும். ஏபிஎஸ் , இரட்டை டிஸ்க் பிரேக்குகள் , டிஜிட்டல் கன்சோல் போன்றவற்றை பெற்றிருக்கும்.

hero hx250r front

வருகை : பிப்ரவரி 2016

விலை : 1.60 லட்சம்

போட்டியாளர்கள் : சிபிஆர் 250 ஆர் , மோஜோ

3.  மஹிந்திரா மோஜோ ஏபிஎஸ்

மஹிந்திரா மோஜோ ஏபிஎஸ் மட்டுமல்லாமல் நாடு முழுதும் மோஜோ பைக் விற்பனைக்கு வரவுள்ளது. மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் டூரிங் ரக பைக்காக விளங்குகின்றது.

mahindra-mojo (2)

வருகை : ஏப்ரல் 2016

விலை : 1.90 லட்சம்

போட்டியாளர்கள் :  கேடிஎம் டியூக் 390 , சிபிஆர் 250ஆர்

4. கேடிஎம் ஆர்சி390

கேடிஎம் ஆர்சி390 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலில் கூடுதல் வசதிகளான சிலிப்பர் கிளட்ச் , ரைட் பை வயர் நுட்பம் புதிய அலுமினிய புகைப்போக்கி போன்றவற்றை பெற்றிருக்கும்.

2016-KTM-RC-390

வருகை : பிப்ரவரி 2016

விலை : 2.30 லட்சம்

5. யூஎம் ரெனேகேட் கமாண்டோ

யூஎம் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016யில் விற்பனையை தொடங்க உள்ளது. முதலில் யூஎம் ரெனேகேட் கமாண்டோ பைக்கில் 300சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

um-renegade-commando

வருகை : பிப்ரவரி 2016

விலை : 1.60 லட்சம்

6. யமஹா MT-03

யமஹா ஆர்3 பைக் மாடலின் நேக்டு ஸ்போர்ட்ஸ் மாடலாக வரவுள்ள 321சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மிக சிறப்பான ஸ்டைலுடட் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தக்கைடிய மாடலாக விளங்கும்.

Yamaha-mt-03

வருகை : பிப்ரவரி 2016

விலை : 3.00 லட்சம்

போட்டியாளர்கள் ; டிஎன்டி 300 , Z250 , டியூக் 390

7. ஹயாசாங் ஜிடி 300ஆர்

ஹயாசாங் ஜிடி 250ஆர் பைக்கின் புதிய மாடலான ஜிடி 300ஆர் பைக்கில் 27.6 பிஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். சிறப்பான ஸ்டைலிங் மேம்படுத்தப்பட்டுள்ள ஜிடி 300ஆர் பைக்கில் ஏபிஎஸ் நிரந்தரமாக இருக்கும்.

2016-Hyosung-GT300R-Motorcycle

வருகை : ஜூன் 2016

விலை : 3.00 லட்சம்

8. டிவிஎஸ் பிஎம்டபிள்யூ ஜி 310ஆர்

டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள ஜி 310ஆர் பைக்கில் 34பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 313சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

tvs-bmw-motorrad-g-310-r-blue

வருகை : ஜூன் 2016

விலை : —

9. பஜாஜ் பல்சர் CS400

40 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 373சிசி என்ஜின் பொருத்தப்பட்ட பஜாஜ் பல்சர் CS400 பைக் பல சிறப்பம்சங்களை கொண்டாதாகவும் சிறப்பான ஸ்டைலிங் கொண்ட மாடலாக வரவுள்ளது.

bajaj-pulsar-cs400

வருகை : மே 2016

விலை : 2.30 லட்சம்

10. பெனெல்லி டொர்னாடோ 302

பெனெல்லி நிறுவனத்தின் டொர்னாடோ 302 பைக்கில் 300சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். முழுதும் ஃபேரிங் செய்யப்பட்ட மாடலாக டொர்னாடோ 302 வரவுள்ளது.

Benelli-Tornado-302

வருகை : ஜூன் 2016

விலை : 3.00 லட்சம்

போட்டியாளர்கள் ; ஆர்சி390

11. ராயல் என்பீல்டு ஹிமாலயன்

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் அட்வென்ச்சர் டூரிங் பைக்கில் 410சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இரு விதமான வேரியண்டில் ஹிமாலயன் வரவுள்ளது.

ஹிமாலயன் பைக்

வருகை : பிப்ரவரி 2016

விலை : 2.00 லட்சம்

மேலும் படிக்க ; புதிய சூப்பர் பைக்குகள் 2016

இதில் நீங்க வாங்க போற பைக் ஏது கமென்ட் பன்னுங்க ….கண்டிப்பாக நடக்கும் வாழ்த்துக்கள்

 

Tags: Motorcycle
Previous Post

உலகின் நெ.1 கார் நிறுவனம் : டொயோட்டா

Next Post

புதிய மாருதி டிசையர் 2018யில் வருகை

Next Post

புதிய மாருதி டிசையர் 2018யில் வருகை

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version