Home Auto News

புதிய பைக் வாங்க சில டிப்ஸ்

புதிய பைக் வாங்கலாமா ? புதிய பைக் வாங்க முன் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விபரங்கள் மற்றும் பைக் வாங்குமுன் கவனத்தில் கொள்ள வேண்டிய பல்வேறு தகவல்களை அடங்கிய தொகுப்பு பைக் வாங்குபவர்களுக்கு உதவிகரமானதாக அமையும்… புதிய பைக் வாங்க டிப்ஸ்

பைக் வாங்க

  • புதிய பைக் வாங்கும் தேவை என்ன? என்பதை முதலில் கவனத்தில் கொள்ளுங்கள்.
  • உங்களால் பைக் வாங்க எவ்வளவு செலவு செய்ய முடியும். அதாவது உங்கள் பட்ஜெட்(50,000த்திற்குள் அல்லது 1 லட்சத்திற்கு மேல்)
  • உங்களின் தினசரி சராசரி பயண தூரம் எவ்வளவு.(அலுவலகம் செல்பவரா அல்லது விற்பனை பிரதிநிதியா )
  •  நீங்கள் விரும்பும் மைலேஜில் எத்தனை பைக்கள் உள்ளன என அறிந்து ஒரு பட்டியல் தயார் செய்வது.
  • அந்த பைக் பட்டியலில் உங்களை கவர்ந்த பைக் எது? ஏன்? கவர்ந்த பைக் தோற்றமா(Style) மைலேஜா(Mileage) சர்வீஸா(Service) , பிராண்டு பெயர் (Brand name) இன்னும் பல..
  • நாம் தேர்வு  செய்த இரு சக்கர வாகனம் சரி தானா. என அந்த பைக் பயனபடுத்துபவர்களிடம் விமர்சனம் கேட்கலாம் மேலும் நண்பர்கள், சர்வீஸ் சென்டரில் விளக்கம் கேட்கலாம் மேலும் இனையத்தில் விமர்சனம் (Reviews) படிக்கலாம்.

 

  • இவை அனைத்திற்க்கும் மேல் உங்கள் விருப்பமான பைக்கிற்க்கு முக்கியத்துவம் கொடுங்கள். ஏன்னெறால் உங்கள் விருப்பான வாகனத்தில் சவாரி செய்யும் சுகமே தனிதான்.(Yamaha or Royal enfield)

 

  • விலை அதிகமோ அல்லது மைலேஜ் குறைவோ நமக்கு விருப்பமான பைக்கில் பயணம் செய்யும் பொழுது நம்மை அறியாமலே நமக்கான பாதுகாப்பும் கிடைக்கும்.

 

  •  உங்கள் விருப்பமான புதிய பைக் வாங்கினாலும் கூடவே தலைகவசம்(Helmet) வாங்க மறக்காதீர்.

 

  • தலைகவசத்துடன் பயணம் தொடருங்கள், உங்கள் தலைக்கும் உறவுகளுக்கும் அதுதான் கவசம்.
Exit mobile version