புதிய மாருதி சுசூகி ஆல்டோ வருகை உறுதியானது

0

இந்தியாவின் முதன்மையான பயணிகள் வாகன தயாரிப்பாளாரான மாருதி சுசூகி நிறுவனத்தின் மாருதி ஆல்ட்டோ காரின் புதிய தலைமுறை மாடல் உருவாக்கப்பட்டு வருவதாக மாருதி சுசூகி நிர்வாக இயக்குநர் கெனிச்சி அயுகவா தெரிவித்துள்ளார்.

new Maruti Alto 800

Google News

மாருதி சுசூகி நிர்வாக இயக்குநர் & தலைமை செயல் அதிகார் கெனிச்சி அயுகவா டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கைக்கு அளித்துத்துள்ள பேட்டியில் சியாஸ் செடான் மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற பிரிமியம் கார்களின் வெற்றியை தொடரும் நோக்கில் உள்ளதாக தெரிவிக்கையில் இந்திய வாடிக்கையாளர்கள் மேம்படுத்தபட்ட மற்றும் அதிக பிரிமியம்  கார்களை மாருதி சுஸூகி நிறுவனத்திடம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா பயணிகள் கார் சந்தையில் 47 சதவீத பங்களிப்பினை பெற்று விளங்கும் மாருதி நிறுவனம் மேலும் 10 சதவீத சந்தை மதிப்பினை அதிகரிக்கும் நோக்கில் தங்களுடைய வருங்கால மாடல்களை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

ஆண்டுக்கு 15 லட்சம் கார்கள் வரை தயாரிக்கும் திறனை கொண்டுள்ள மாருதி சுஸூகி அடுத்த வருடத்தில் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள ஆலையை திறக்க திட்டமிட்டுள்ளது. இது தவிர மானசேர் மற்றும் குர்கான் உற்பத்தியை 10 சதவீதம் அதிகரிக்கும் நோக்கில் மூன்றாவது ஷிஃப்ட்டை திறக்கவும் வருகின்ற 2020க்குள் வருடத்துக்கு 20 லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கினை நிர்னையித்துள்ளது. கடந்த நிதி ஆண்டில் 13 லட்சம் கார்கள் இந்தியாவிலும் 1.2 லட்சம் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுதைய சந்தையின் முக்கிய மாடலாக விளங்கும் மாருதி ஆல்ட்டோ காரின் உற்பத்தி கடந்த சில மாதங்களாகவே அதாவது ரெனோ க்விட் காரின் வரவுக்கு பின்னால் சரிவினை சந்திக்க தொடங்கி உள்ளதால் அதனை ஈடுகட்டும் நோக்கில் புதிய தலைமுறை ஆல்ட்டோ கார் இந்தியாவில் அமல்ப்படுத்தப்பட உள்ள பாரத் கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்ற மாடலாக இருக்கும் வகையில் தரமான கட்டமைப்புடன் ஸ்டைலிங்கான மாடலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

தகவல் உதவி : et auto