புதிய மாருதி டிசையர் காரின் ஸ்பை படங்கள் வெளியானது

வரவுள்ள அடுத்த தலைமுறை புதிய மாருதி டிசையர் காரின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 2017 மாருதி சுஸூகி ஸ்விப்ட் காரினை அடிப்படையாக கொண்ட டிசையர் மாடல் அடுத்த வருடத்தின் மத்தியில் சந்தைக்கு வரலாம்.

விற்பனையில் உள்ள காரை விட டிசையர் மிக இலகுவான எடை கொண்டதாகவும் ,சிறப்பான இடவசதி , பாரத் கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு அம்சங்களுக்கு ஏற்ற மாடலாக , பல நவீன வசதிகளை பெற்ற மாடலாக வரவுள்ளது.

பலேனோ காரின் வடிவ தாத்பரியங்களை பெற்ற மாடலாக எதிர்பார்க்கப்படும் புதிய தலைமுறை ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்கள் பல்வேறு விதமான வசதிகளை கொண்டதாக தற்பொழுது விற்பனையில் உள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.3 லிட்டர் ஃபியட் டீசல் இன்ஜின் போன்றவற்றில் மேம்படுத்தப்பட்ட ஆற்றல் மற்றும் கூடுதல் டார்க் வெளிப்படுத்தும் வகையிலும் அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தினை தரவல்லதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தியாவின் மிக முக்கியமான காம்பேக்ட் செடான் ரக காரான மாருதி டிசையர் காரில் புராஜெக்டர் முகப்பு விளக்குகள் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , ஆப்பிள் கார் பிளே ,ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்றவற்றை பெற்றதாக விளங்கும். புதிய தலைமுறை டிசையர் காரின் போட்டியாளர்கள் போக்ஸ்வேகன் எமியோ , அமேஸ் மற்றும் பிகோ ஆஸ்பயர் கார்களாகும். 2017 மாருதி சுஸூகி ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்கள் அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம்.

spy image source: cartoq

Share
Tags: Dzire