புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் காரில் ஏஎம்டி வருகை

0

அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ள புதிய மாருதி ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களில் ஏஎம்டி மற்றும் எஸ்ஹெச்விஎஸ் நுட்பம் இடம்பெற்றிருக்கும். புதிய ஸ்விஃப்ட் கார் மிக சிறப்பான மைலேஜ் தரும் காராக விளங்கும்.

2017 maruti suzuki Swift Leaked

தீவரமான சோதனை ஓட்டத்தில் உள்ள புதிய ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களின் தோற்றம் மற்றும் இன்டிரியர் அமைப்புமுற்றிலும் மேம்படுத்தப்பட்டு பல்வேறு நவீன அம்சங்களுடன் விரைவில் நடைமுறைக்கு வரவுள்ள பாரத் கிராஷ் டெஸ்ட் சோதனைகளுக்கு ஏற்றதாக வரவுள்ள இந்த மாடல்களில் முன்பக்க இரண்டு ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் பிரேக் நிரந்தரமாக அனைத்து வேரியன்டிலும் இடம்பிடிக்க உள்ளது. மேலும் டாப் வேரியன்டில் இரண்டுக்கு மேற்பட்ட ஏர்பேக் இடம்பெறலாம் என கருதப்படுகின்றது.

தற்பொழுது விற்பனையில் உள்ள மாடல்களில் பொருத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் K வரிசை பெட்ரோல் எஞ்சின் மற்றும் ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் அல்லது மாருதி புதிதாக உருவாக்கி வரும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இரு எஞ்சின் ஆப்ஷனிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஜிஎஸ் (AGS – Auto Gear Shift) அதாவது ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனும் ஒன்றுக்கு மேற்பட்ட வேரியன்டில் கிடைக்கலாம்.

சுஸூகி SHVS

சுஸூகி நிறுவனத்தின் மைல்ட் ஹைபிரிட் SHVS சிஸ்டம் புதிய ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களில் இடம்பெற வாய்ப்புள்ளது.இதன் காரணமாக சிறப்பான மைலேஜ் தரும் வகையில் புதிய கார்கள் விளங்கும். 2017 ஆம் வருடத்தின் மத்தியில் டிசையர் மற்றும் ஸ்விஃப்ட் கார்கள் விற்பனைக்கு வரலாம் எ எதிர்பார்க்கப்படுகின்றது.

படிக்க : சுஸூகி SHVS என்றால் என்ன ?