புதிய ஹோண்டா சிட்டி டீஸர் வெளியீடு

வருகின்ற ஜனவரி 12ந் தேதி வரவுள்ள மேம்படுத்தப்பட்ட ஹோண்டா சிட்டி செடான் காரின் டீஸர் தாய்லாந்து சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய  ஹோண்டா சிட்டி கார் 2017ஆம் வருடத்தின் தொடக்க மாதங்களிலே விற்பனைக்கு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

விற்பனையில் உள்ள சிட்டி செடான் கார் 2013 ஆம் ஆண்டில் வெளிவந்த மாடலாகும். தற்பொழுது தோற்றம் மற்றும் இன்டிரியர் போன்றவற்றில் பல்வேறு மாற்றங்கள் கூடுதல் வசதிகளை பெற்றதாக புதிய சிட்டி கார் விளங்கும். விற்பனையில் உள்ள சிட்டி காரில் உள்ள அதே 1.5 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்களில் எந்த மாற்றங்களும் இல்லாமல் இந்தியாவில் வரலாம்  எதிர்பார்க்கப்படுகின்றது.

ஃபேஸ்லிஃப்ட் ஹோண்டா சிட்டி

ஃபேஸ்லிஃப்ட் சிட்டி செடான் காரின் முன்பக்க தோற்ற அமைப்பு ஹோண்டா சிவிக் காரின் டிசைன் தாத்பரியங்களின் தோற்றதை அடிப்படையாக கொண்டதாக அமைந்துள்ளது. முகப்பில் மேம்படுத்தப்பட்ட புராஜெக்டர் முகப்பு விளக்கு , எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்றிருக்கும். டாப் வேரியன்டில் எல்இடி முகப்பு விளக்கினை பெற்றிருக்கும். மேம்படுத்தப்பட்ட கிரிலுடன் க்ரோம் பூச்சு,  பனி விளக்கு , ஏர்டேம் போன்றவற்றில் சிறிய அளவிலான மாற்றங்கள் இருக்கலாம்.

இன்டிரியரில் மேம்படுத்தப்பட்ட டேஸ்போர்டு , தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே வசதிகள் , பிரிமியம் லெதர் இருக்கைகள் போன்றவற்றை கொண்டதாக இருக்கலாம். இந்தியாவில் 2017 ஆம் ஆண்டின் ஜனவரி மாத இறுதியில் விற்பனைக்கு எதிர்பார்கப்படுகின்றது.

 

Exit mobile version