பெட்ரோல் என்ஜினில் ஸ்கார்ப்பியோ, எக்ஸ்யூவி500 கார்கள் ?

மஹிந்திரா நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி கார்களான ஸ்கார்ப்பியோ , எக்ஸ்யூவி500 போன்ற கார்களில் பெட்ரோல் என்ஜின் மாடல்களை அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

டெல்லி மற்றும் கேரளா போன்றவற்றில் 2000சிசி மற்றும்  அதற்கு மேல் சிசி கொண்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட கார்களை விற்பனை செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. மேலும் இதுதவிர சென்னை , மும்பை , கோல்கத்தா , பெங்களூரூ பாட்னா , ஹைத்திராபாத் பாட்னா மற்றும் ஜலந்தர் போன்ற முன்ன்னி நகரங்களிலும் இந்த தடை அமலுக்கு வரலாம்.

2000சிசி தடையின் காரணமாக மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய எம்ஹாக் என்ஜினை 1.99 லிட்டர் என்ஜினாக மாற்றி அறிமுகம் செய்துள்ளது.மேலும் பல மாநிலங்கள் விரைவில் டீசல் கார் தடை உத்தரவில் சிக்க உள்ளதால் விரைவில் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 கார்களில் 2.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அல்லது 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல்கள் இந்த வருடத்திற்குள் சந்தைக்கு விற்பனை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Exit mobile version