பெனெல்லி 300 பைக்குகள் டெலிவரி – தமிழ்நாடு

0

சென்னையில் அமைந்துள்ள பெனெல்லி மோட்டார்சைக்கிள் ஷோரூம் வாயிலாக கடந்த ஒரு வருடத்தில் 400 முன்பதிவுகளை பெற்று தமிழ்நாட்டில் இதுவரை 300 பெனெல்லி பைக்குகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.

benelli-1st-year-chennai

இத்தாலியின் பெனெல்லி நிறுவனம் இந்தியாவில் டிஎஸ்கே நிறுவனத்துடன் இணைந்து கடந்த ஆண்டின் தொடக்கத்தில் தன்னுடைய சேவையை தொடங்கியது. மிக சிறப்பான செயல்திறன்களை கொண்ட மோட்டார்சைக்கிளை பெனெல்லி விற்பனை செய்து வருகின்றது.

தற்பொழுது 6 மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனை செய்கின்றது. இந்த பைக்குகள் புனேவில் ஒருங்கிணைக்கப்படுவதனால் போட்டியாளர்களுடன் ஈடுகொடுக்கும் வகையில் மிக சவாலான விலையில் அமைந்துள்ளது. விற்பனைக்கு வந்த குறுகிய காலத்தில் டிஎஸ்கே-பெனெல்லி மிக சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.

300 பைக்குகள் டெலிவரி செய்யப்பட்டதை கொண்டாடும் வகையில் மாபெரும் ரைடிங்கினை சென்னையில் நடத்தி கொண்டாடியுள்ளது.