Site icon Automobile Tamil

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி காரின் டீசல் என்ஜின் விபரம்

உலகின் மிக வேகமான எஸ்யூவி கார் என்ற பெருமைக்குரிய பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி மாடல் வாயிலாக முதன்முறையாக டீசல் என்ஜின் மாடலை பென்ட்லீ அறிமுகம் செய்துள்ளது. பென்டைகா டீசல் காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 270 கிலோமீட்டர் ஆகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக இந்தியாவில் ரூ. 3.85 கோடியில் விற்பனைக்கு வந்த பென்டைகா காரில் காரில் 600hp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த W12 ட்வின் டர்போசார்ஜ்டு 6.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 900Nm ஆகும். இதில் 8 வேக ZF ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டாப் ஸ்பீடு மணிக்கு 301கிமீ ஆகும். 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 4.1 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

8 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் 60ஜிபி ஹார்ட் டிரைவ் சேமிப்பகத்தை பெற்றுள்ளது. மேலும் 10.2 இஞ்ச் அகலம் கொண்ட பென்ட்லி ஆன்ட்ராய்டு டேப்லெட் பொருத்தியுள்ளனர் . இதனை தேவைப்படும் பொழுது தனியாக எடுத்து கொள்ள முடியும் வசதி என பல நவீன தலைமுறை வசதிகளை கொண்டதாகும்.

பென்டைகா டீசல் என்ஜின்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள பென்ட்லீ பென்டைகா டீசல் என்ஜின் ஆடி நிறுவனத்துடன் சேர்ந்து இரண்டு ட்வீன்-ஸ்கோரல் டர்போசார்ஜ்ரடன் இணைந்த எலக்ட்ரிக்கல் சூப்பர்சார்ஜருடன் செயல்படும் டீசல் இன்ஜின் அதிகபட்ச குதிரை சக்தி 435 hp வெளிப்படுத்தும் டிர்பிள்-சார்ஜ்டு 4.0 லிட்டர் V8  டீசல் இன்ஜினை பெற்றுள்ளது. இதன் டார்க் 900 Nm ஆகும். இதில் இசட்எஃப் (ZF) 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுவதற்கு 4.8 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். பென்டைகா டீசல் காரின் உச்ச வேகம் ஒரு மணி நேரக்குக்கு 270 கிலோமீட்டர் ஆகும்.

சர்வதேச அளவில் 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பென்ட்லீ பென்டைகா டீசல் விற்பனைக்கு வருவதனை தொடர்ந்து இந்தியாவில் அடுத்த ஆண்டின் மத்தியில் கிடைக்க பெறலாம்.

Exit mobile version