போர்ஷே மிஷன் E எலக்ட்ரிக் கார் உற்பத்திக்கு செல்கின்றது

0

போர்ஷே மிஷன் E எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் உற்பத்திக்கு எடுத்து செல்ல போர்ஷே திட்டமிட்டுள்ளது. போர்ஷே மிஷன் E எலக்ட்ரிக் கார் 2020ம் ஆண்டில் சந்தைக்கு வரவுள்ளது. பிராங்ஃபர்ட் மோட்டார் ஷோவில் பார்வைக்கு வந்த போர்ஷே நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் ஆகும்.

porsche-electric-car-confirmed

Google News

ஸ்டட்கர்ட்- ஜூஃபென்ஹூஸன் ஆலையில் மிஷன் இ கான்செப்ட் காரின் மூலம் 700 மில்லியன் யூரோ முதலீடு செய்ய உள்ளதால் 1000 புதிய வேலைவாய்ப்புகள் , புதிய எலக்ட்ரிக் மோட்டார் தயாரிப்பு பிரிவு,  உற்பத்தி பிரிவு மற்றும் பெயின்ட் ஷாப்  போன்றவற்றை போர்ஷே உருவாக்க உள்ளது.

 

Porsche-Mission-E-Concept-dashboard

மிஷன் இ கான்செப்ட் முழுமையான மின்சார ஸ்போர்ட்ஸ் காராக விளங்கும். இதில் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும். முன் ஆக்சில் மற்றும் பின்புறத்தில் பொருத்தப்பட உள்ளது. இதன் மொத்த ஆற்றல் 600 பிஹெச்பி ஆற்றலை நெருங்கும். 0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 3.5 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். 200கிமீ வேகத்தை எட்ட 12 விநாடிகள் தேவைப்படும். போர்ஷே மிஷன் E எலக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் முழுமையாக செய்தால் 500கிமீ தூரம் பயணிக்க இயலும்.

டெஸ்லா எஸ் மாடலுக்கு நேரடியான சவாலாக போர்ஷே மிஷன் இ கான்செப்ட் விளங்கும். 4 கதவுகள் , 4 இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் காரின் எடை 2000கிலோவாக இருக்கும். இதன் 800 வோல்ட் யூனிட் 15 நமிடத்தில் 80 % சார்ஜிங் ஆகியிருக்கும்.

எதிர்கால எலக்ட்ரிக் யுகத்தை எதிர்கொள்ளும் வகையில் பேட்டரியில் இயங்கும் மிக சிறப்பான ஸ்போர்ட்ஸ் காராக போர்ஷே மிஷன் இ கார் விளங்கும் என போர்ஷே ஏஜி சேர்மன் தெரிவித்துள்ளார்.

[envira-gallery id=”4146″]