Home Auto News

மலேசியா சந்தையில் களமிறங்கும் பஜாஜ் ஆட்டோ

இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இருசக்கர வாகன விற்பனையில் சிறப்பான வளர்ச்சி அடைந்து வருகின்ற நிலையில் பல்வேறு நாடுகளில் விற்பனையை தொடங்கி வருகின்றது. அதன் விளைவாக மலேசியா நாட்டில் தனது மாடல்களை களமிறக்க பஜாஜ் திட்டமிட்டுள்ளது.

மலேசியா பஜாஜ்

 

சமீபத்தில் பஜாஜ் அறிமுகம் செய்துள்ள டோமினார்400 பவர் க்ரூஸர் பைக் அமோக ஆதரவினை பெற்றிருப்பதுடன் சிறப்பான செயல்திறனை கொண்டதாகவும் விளங்குகின்றது. இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற பஜாஜ் பைக்குகள் மலேசியாவில் முதல் மாடலாக டோமினார் 400 பைக்கை களமிறக்க உள்ளது.

இதுகுறித்து மணிகண்ட்ரோல் இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ள பஜாஜ் ஆட்டோ வணிக மேம்பாட்டு பிரிவு தலைவர் திரு. ரவிகுமார் கூறுகையில்.. சமீபத்தில் மலேசியா சந்தைக்கும் பைக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கேடிஎம் டியூக் 390 பைக்கில் இடம்பெற்ற அதே 373 சிசி எஞ்சின் டிரிபிள் ஸ்பார்க் நுட்பத்துடன்  34.50 hp பவரை 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும்.  இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.  டோமினார் 400 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 148 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

  • என்ஜின் – 373cc
  • பவர் – 34.5 bhp @ 8000rpm
  • டார்க்: 35Nm @ 8500rpm
  • கியர்பாக்ஸ் – 6 வேகம்
  • எடை – 182 kg
  • எரிபொருள் கலன் – 13 லிட்டர்

பஜாஜ் டோமினார் துருக்கி ,தென்ஆப்பரிக்கா , மெக்சிக்கோ மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. மேலும் சமீபத்தில் பல்சர் 160 என்எஸ் பைக் நேபால் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

Exit mobile version