மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் 1.99 லிட்டர் என்ஜினில் ஆட்டோ பாக்ஸ்

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதிக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி 500  எஸ்யுவி காரின் 1.99 லிட்டர் என்ஜின் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

mahindra-xuv500

2000சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட சிசி கொண்ட டீசல் என்ஜின் மாடல்கள் டெல்லியில் பதிவு செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளா மாநிலத்தின் சில மாவட்டங்களிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதுதவிர 11 முன்னனி தலைநகரங்களில் தடைவிதிக்க வாய்ப்புள்ள நிலையில் உள்ளது.

விற்பனை சரிவினை ஈடுகட்டும் வகையில் அறிமுகம் செய்யப்பட்ட 2.2 லிட்டர் எம்ஹாக் என்ஜினை ரீபோர் செய்து 1.99 லிட்டர் என்ஜினாக மாற்றி ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யுவி 500 கார்களில் அறிமுகம் செய்துள்ளது. ஆற்றலில் எந்த மாற்றங்களும் இல்லாமல் 140 hp ஆற்றலை வெளப்படுத்தும் 1.99 லிட்டர் என்ஜின் இழுவைதிறன் 320Nm ஆகும். தற்பொழுது W6 AT , W8 AT , மற்றும் W10 AT போன்ற வேரியண்ட்களில் 6 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

மேலும் டாப் வேரியண்டில் அமைந்திருக்கும் மைக்ரோ ஹைபிரிட் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டத்தினை நீக்கியுள்ளது.

1.9 லிட்டர் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 விலை பட்டியல் (டெல்லி)

XUV500 W4:  ரூ. 12,23,088

XUV500 W6: ரூ. 13,63,428

XUV500 W6 FWD AT: ரூ. 14,51,035

XUV500 W8: ரூ. 15,38,194

XUV500 W8 FWD AT:  ரூ. 15,94,306

XUV500 W10: ரூ. 16,28,626

XUV500 W10 FWD AT: ரூ. 17,31,984

Exit mobile version