Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி வேரியண்ட் – முழு விபரம்

by automobiletamilan
மே 27, 2015
in செய்திகள்
மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரின் வேரியண்ட்கள் மற்றும் அதன் வித்தியாசங்களை முழுமையாக இந்த பகர்வில் தெரிந்து கொள்ளலாம்.  மொத்தம் 6 வேரியண்ட்களை எக்ஸ்யூவி500 கொண்டுள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் 140பிஎச்பி ஆற்றலை தரவல்ல 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 330என்எம் ஆகும். 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

7 இருக்கைகள் கொண்ட எக்ஸ்யூவி 500 கார் மொத்தம் 7 வண்ணங்களில் கிடைக்கின்றது. டிஸ்க் பிரேக் , இரட்டை காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ் இபிடி அனைத்து வேரியண்டிலும் உள்ளது.

எக்ஸ்யூவி500 எஸ்யூவி வேரியண்ட் – முழு விபரம்

1. W4 வேரியண்ட்

அடிப்படை வேரியண்டான W4யில் இரண்டு காற்றுப்பைகள் , ஏபிஎஸ் உடன் இணைந்த இபிடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மைக்ரோ ஹைபிரிட் , இம்மொபைல்சர் , சென்ட்ரல் லாக்கிங் , ஃபாலோ மீ ஹோம் முகப்பு விளக்குகள், பவர் ஸ்டீயரிங் , பவர் விண்டோ , ரீமோட் மூலம் டெயில் கதவினை திறக்க முடியும்.

2. W6 வேரியண்ட்

W4 வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக 6 இஞ்ச் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , பூளூடுத் , மழை உணர்ந்து இயங்கும் வைப்பர் , முகப்பில் குரோம் பூச்சு கிரில் , ஆடியோ மற்றும் வாய்ஸ் கட்டுப்பாடு பொத்தான்கள் ஸ்டீயரிங் வீலில் உள்ளது.

3. W8 வேரியண்ட்

W6 வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக  7 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , ஜிபிஎஸ் , யூஎஸ்பி , போன்ற அம்சங்கள் உள்ளது. மேலும் பனி விளக்குகளில் குரோம் பூச்சு , டயர்ட்ரானிக்ஸ் , 17 இஞ்ச் ஆலாய் வீல் , மஹிந்திரா பூளூ சென்ஸ் ஆப் , இ மெனுவல் , இரட்டை காற்றுப்பைகளுடன் கூடுதலாக பக்கவாட்டில் மற்றும் கர்டைன் காற்றுப்பைகளுடன் மொத்தம் 6 காற்றுப்பைகள் ,  வாகனம் கவிழ்வதனை தடுக்கும் இஎஸ்பி 9 , மலை ஏற மற்றும் இறங்க உதவும் அமைப்பு  போன்ற வசதிகள் உள்ளன.

4. W8  AWD வேரியண்ட்

W8 வேரியண்டில் உள்ள வசதிகளுடன் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனில் (AWD) கூடுதலாக கிடைக்கும்.

5. W10 வேரியண்ட்

எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த வேரியண்டில் W8 வேரியண்ட் வசதிகளுடன் கூடுதலாக சன்ரூஃப் , ORVM மூலம் லோகோவை புராஜெக்ட் செய்யும் வசதி , வாய்ஸ் அமைப்பு , எலக்ட்ரானிக் ஸ்டீயரிங் லாக் ,ஒளிரும் ஸ்கஃப் பிளேட் , பவர் அட்ஜெஸ்ட் ஓட்டுநர் இருக்கை , ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன.

6. W10  AWD வேரியண்ட்

W10 வேரியண்டில் உள்ள வசதிகளுடன் ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனில் (AWD) கூடுதலாக கிடைக்கும்.


மஹிந்திரா எக்ஸ்யூவி 5OO  அறிமுகம்


மஹிந்திரா எக்ஸ்யூவி 500 விலை


எக்ஸ்யூவி500 W4– ரூ.11.34 லட்சம்

எக்ஸ்யூவி500 W6— ரூ.12.54 லட்சம்

எக்ஸ்யூவி500 W8—- 14.27 லட்சம்

எக்ஸ்யூவி500 W8 — 15.14 லட்சம் (ஆல் வீல் டிரைவ்)


எக்ஸ்யூவி500 W10–15.10 லட்சம்

எக்ஸ்யூவி500 W10—16.15 லட்சம்  (ஆல் வீல் டிரைவ்)

(ex-showroom Chennai)

Mahindra XUV5OO SUV CAR variant details and Chennai price 

Tags: MahindraSUVXUV500எக்ஸ்யூவி500
Previous Post

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 விற்பனைக்கு வந்தது

Next Post

மாருதி செலிரியோ டீசல் மாடல் ஜூன் 3 முதல்

Next Post

மாருதி செலிரியோ டீசல் மாடல் ஜூன் 3 முதல்

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version