மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி கார் வரும் 18ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. சிறிய ரக காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக மஹிந்திரா கேயூவி100 விளங்கும்.
பிரிமியம் ஹேட்ச்பேக் கார்களுடன் போட்டியை சந்திக்க உள்ள கேயூவி100 கார் எஸ்101 என்ற குறியீட்டு பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. தற்பொழுது கேயூவி100 காரின் இணையதளத்தில் விரைவில் வரவுள்ளதை குறிப்பிட்டுள்ளது.
மஹிந்திரா தன்னுடைய மாடல்களுக்கு எக்ஸ்யூவி500 காரின் அறிமுகத்துக்கு பிறகு தன்னுடைய கார் மாடல்களின் பெயரினை XUV5OO , TUV3OO என்ற பெயரிலும் தற்பொழுது வரவுள்ள காம்பேக்ட் மாடலுக்கு KUV1OO என பெயரிட்டுள்ளது.
மஹிந்திரா KUV100
மஹிந்திரா KUV100 எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் மற்றும் புத்தம் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் வரவுள்ளது. டியூவி300 காரில் பொருத்தப்பட்டிருந்த அதே 1.5 லிட்டர் இதிலும் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 84பிஹெச்பி மற்றும் டார்க் 230என்எம் ஆகும்.
மஹிந்திரா சாங்யாங் நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கியுள்ள புதிய 1.2 லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனிலும் வரவுள்ளது. இதன் ஆற்றல் 75பிஹெச்பி மற்றும் டார்க் 110என்எம் ஆகும்.
இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷனும் வரவுள்ளது.
டிசைன் தாத்பரியங்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் சாயிலினை தழுவியிருக்கலாம் என தெரிகின்றது. மேலும் கேயூவி100 காரில் 6 இருக்கைகளுடன் சிறப்பான இட வசதி பெற்றிருக்கும் என தெரிகின்றது.
முழுமையான விபரங்களுக்கு இணைந்திருங்கள் ஆட்டோமொபைல் தமிழன் தளத்துடன் என்றுமே…..