மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் எப்பொழுது

மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்டிவ் டூரர் ரக பைக் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. மஹிந்திரா மோஜோ பைக் பல ஆண்டுகளாக சோதனை ஓட்டத்தில் உள்ள நிலை தற்பொழுது விற்பனைக்கு வரும் நிலையை எட்டியுள்ளது.
பலமுறை விற்பனையை தள்ளிபோட்டு வந்த மஹிந்திரா இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு கொண்டு வரலாம் என தெரிகின்றது. 2011ம் ஆண்டு காட்சிக்கு வந்த மோஜோ பைக் கடந்த 5 வருடங்களாக சோதனையில் உள்ளது.
இரட்டை பிரிவு முகப்பு விளக்குடன் பகல் நேர விளக்குகள் என மிக அதிகப்படியான ஃபேரிங் இல்லாமல் நேர்த்தியான வடிவமைப்பில் எளிதாக கவர்ந்திழுக்கும் தோற்ற அமைப்பில் விளங்கும் மோஜோ பைக் இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும்.
மஹிந்திரா மோஜோ பைக்கில் 300சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். 27பிஎச்பி முதல் 31பிஎச்பி ஆற்றலுக்குள் இருக்கலாம் என தெரிகின்றது. இதன் முறுக்குவிசை 30என்எம் ஆக இருக்கலாம். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இருக்கும்.
image credits : motoroids
தோற்றம் மற்றும் என்ஜின் ஆற்றல் என இரண்டிலும் சிறப்பானதாக விளங்க உள்ள புதிய மஹிந்திரா மோஜோ பைக்கில் முன்புறம் 320மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் இருக்கும்.

முன்புறத்தில் 110/70/ZR17 மற்றும் 150/60/ZR17 பின்புறத்தில் பைரேலி டையப்லோ ரோஸ்ஸோ டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது. 21 லிட்டர் எரிபொருள் கலன் பொருத்தப்பட்டிருக்கலாம்.

மஹிந்திரா மோஜோ பைக் விலை ரூ. 1.60 முதல் 1.75 லட்சத்திற்க்குள் இருக்கலாம். மோஜோ போட்டியாளர்கள் கேடிஎம் டியூக் 390 , ஹோண்டா சிபிஆர் 250ஆர் , நின்ஜா 300 போன்ற பைக்குகளுக்கு சவாலினை தரவல்லதாகும்.

 மஹிந்திரா மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் வரும் செப்டம்பர் இறுதியிலோ அல்லது அக்டோபர் தொடக்கத்திலோ சந்தைக்கு வரவுளது.

Mahindra Mojo motorcycle come this September or October  
Exit mobile version