மஹிந்திரா வர்த்தக வாகனப் பிரிவின் வாயிலாக அனைத்து ரகத்திலும் டிரக்குகளை அடுத்த மூன்று வருடங்களில் களமிறக்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது. அமெரிக்க டாலர் 16.9 பில்லியன் மதிப்பில் மஹிந்திரா டிரக் மற்றும் பஸ் (Mahindra Truck and Bus Division – MTBD ) பிரிவு செயல்பட்டு வருகின்றது.
அடுத்த மூன்று வருடங்களில் வர்த்தக வாகனப் பிரிவின் அனைத்து ரகத்திலும் டிரக்குகளை களமிறக்குவது மற்றும் நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை இரட்டிப்பு சதவீதத்தை அடைவதனை இலக்காக கொண்டு செயல்பட திட்டமிட்டுள்ளது. இதுதவிர ஆப்பரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யவும் உள்ளது.
பொதுவாக வர்த்தக வாகனங்கள் 3.5 டன் முதல் 40 டன் வரையிலான தற்பொழுது மஹிந்திரா டிரக்குகள் 8-16 டன் டிரக் பிரிவு தவிர அனைத்திலும் தங்களுடைய வர்த்தக வாகனங்களை விற்பனை செய்து வருகின்றது.
MTBD நிர்வாக இயக்குனர் நளின் மெகத்தா பிடிஐ-க்கு அளித்துள்ள பேட்டியில் அடுத்த மூன்று வருடங்களில் முழுமையான கமெர்சியல் வாகனங்களை அனைத்து பிரிவிலும் விற்பனை செய்ய நோக்கில் 8-16 டன் பிரிவில் புதிய மாடல்களும் மற்றை பிரிவுகளில் உள்ள வாகனங்களை மேம்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
3.5-7.5 டன் வரையிலான பிரிவில் 12.5 சதவீத சந்தை மதிப்பினை பெற்றுள்ளதை போல 8-16 டன் பிரிவிலும் இதே அளவினை எட்டும் முயற்சியில் உள்ளோம்.
தற்பொழுது வர்த்தக வாகன பிரிவில் 4 சதவீத சந்தை மதிப்பினை கொண்டுள்ள நாங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 8 சதவீத பங்களிப்பினை வழங்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றோம். இது தவிர சமீபத்தில் 300 டிரக்குகளை ஆப்பரிக்கா சந்தைக்கு ஏற்றுமதி செய்துள்ளதால் அடுத்த 2-3 வருடங்களில் ஆப்பரிக்கா சந்தையிலும் சிறப்பான வர்த்தகத்தை முன்னெடுக்க திடமிட்டுள்ளதாக மெகத்தா கூறியுள்ளார்.
மேலும் படிங்க : 20 % பங்களிப்பினை பெற்ற மஹிந்திரா ஜீதோ