மஹிந்திரா ஸ்கார்ப்பியோ பிக்அப் ஸ்பை படங்கள்

மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கேட்வே மாடலின் சோதனை ஓட்ட படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்கார்ப்பியோ பிக்அப் டிரக் மாடல் புதிய தலைமுறை பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

Mahindra-Scorpio-Pickup-Testing

புதிய தலைமுறை ஸ்கார்ப்பியோ மாடல் கடந்த 2014 ஆம் ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வந்தது. இதுவரை கேட்வே மாடல் பழைய காரினை அடிப்படையாக கொண்டதாகவே இருந்து வந்தது.

ஸ்கார்ப்பியோ கேட்வே மாடல் இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் விற்பனையில் உள்ளது. ஆஸ்திரேலியாவில் பிக்-அப் என்ற பெயரில் இதே மாடல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

புதிய தலைமுறை ஹைட்ரோஃபாரமிங் அடிச்சட்டத்தினை பெற்றிருக்கும் மேலும் இது மட்டுமல்லாமல் புதிய ஸ்கார்ப்பியோ எஸ்யூவி காரில் உள்ள அனைத்து அம்சங்களையும் பிக்அப் டிரக்கும் பெற்றிருக்கும். குறிப்பாக எல்இடி ரன்னிங் விளக்குகள் , ஹெட்லைட் , எல்இடி டெயில் விளக்கு , புதிய டேஸ்போர்ட் , இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் என அனைத்து விதமான அம்சங்களையும் இந்த மாடல் பெற்றிருக்கும்.

120பிஎஸ் ஆற்றலை வழங்கும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 280 என்எம் ஆகும். ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனுடன் விளங்கும் கேட்வே டிரக்கில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இருக்கும். வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016யில் பார்வைக்கு வருவதனை தொடர்ந்து விற்பனைக்கு வரலாம்.

வரும் ஜனவரி 6ந் தேதி மஹிந்திரா இம்பிரியோ பிக்அப் விற்பனைக்கு வருகின்றது

Mahindra-Scorpio-Pickup-spy Mahindra-Scorpio-Pickup-Spied

source : motorbeam