Automobile Tamilan

மஹிந்திரா 415di டிராக்டர் விற்பனைக்கு வந்தது

மஹிந்திரா 415di டிராக்ட்ர் 40எச்பி பிரிவில் மிக சிறப்பான மாடலாக மஹிந்திரா 415டிஐ டிராக்ட்ர் வந்துள்ளது. 415di டிராக்டர் 1500கிலோ எடையை லிஃப்ட் செய்யும் திறனை பெற்றுள்ளது.
மஹிந்திரா 415di டிராக்டர்
மஹிந்திரா 415di டிராக்டர் 

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் டிராக்டர் விற்பனையில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாகும். இதன் புதிய மாடல் விவசாய பணிகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

மஹிந்திரா 415di டிராக்டரில் 36எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2730சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உச்சகட்ட முறுக்குவிசை 158என்எம் ஆகும். இதில் பிசிஎம் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது.

40எச்பி பிரிவில் சிறப்பான செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் டிராக்டராக விளங்க உள்ள 415di யின் மூலம் கதிரடிக்க , நிலங்களை உழுவதற்க்கு , ரோட்டோவேட்டர் போன்ற பயன்பாடுகளுக்கு பயன்படுத்த இயலும்.

மஹிந்திரா 415di  அறிமுகத்தின் பொழுது விற்பனை பிரிவு துனை தலைவர் திரு. ரவீந்திர சஹானே கூறியதாவது 40எச்பி பிரிவில் மிக சிறப்பான ஆற்றல் , பல பயன்பாடுகள் மற்றும் அதிகபட்ச எரிபொருள் சிக்கனம் ஆகிய மூன்று தேவைகளையும் நிச்சியமாக இந்த டிராக்டர் பூர்த்தி செய்யும். மேலும் விவசாய தேவைகளை சிறப்பான முறையில் பூர்த்தி செய்யும் என தெரிவித்தார்.

Mahindra launches 415di Tractor – An all New Tractor in the 40 HP Category

Exit mobile version