மஹிந்திரா TUV300 எஸ்யூவி செப்டம்பர் 10 முதல்

புதிய மஹிந்திரா TUV300 எஸ்யூவி காரின் ரகசிய சோதனை ஓட்ட பங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மஹிந்திரா TUV300 எஸ்யூவி 7 இருக்கைகளுடன் காம்பேக்ட் ரக எஸ்யூவிகளுக்கு சவாலாக இருக்கும்.
மஹிந்திரா TUV300

updated:
வரும் செப்டம்பர் 10ந் தேதி மஹிந்திரா TUV300  எஸ்யூவி கார் விற்பனைக்கு கொண்ட வரவுள்ளதை மஹிந்திரா உறுதிப்படுத்தியுள்ளது. புதிய மஹிந்திரா TUV300 புதிய தளத்தில் வரவுள்ளது.

மஹிந்திராவின் புதிய டியூவி300 தற்பொழுது விற்பனையில் உள்ள காம்பேக்ட் ரக மாடல்களில் இருந்து சற்று மிரட்டலான தோற்றத்தில் மஹிந்திராவின் பாரம்பரிய தோற்ற அமைப்பில் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.

குவான்டோ காரில் பொருத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினின் இரண்டாம் தலைமுறை எம்ஹாக் 80 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜின் சிறப்பான் ஆற்றல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும்.

பொலிரோவின் மாற்று மாடல் இல்லை இது புதிய தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய மாடலாகும். இறுதி இருக்கை வரிசையில் ஒற்றை ஜம்ப் இருக்கைகள் பெற்றுள்ளது. TUV 300 காரில் மொத்தம் 7 இருக்கைகள் உள்ளது.

உட்புறத்தில் புதிய ஸ்கார்ப்பியோ மற்றும் XUV500 எஸ்யூவிகளின் தாத்பரியத்தில் டேஸ்போர்டு மற்றும் ஸ்டீயரிங் வீல்கள் இடம்பெற்றிருக்கும்.
டேஸ்போர்டில் ஸ்கார்பியோ காரில் உள்ள தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு இருக்கும்.

முதற்கட்டமாக 2 வீல் டிரைவ் மாடலாக அறிமுகமாகும் டியூவி300 4 வீல் டிரைவ் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடலில் வரலாம் என எதிர்பார்ப்புகள் கிளம்பி உள்ளது.

க்ரெட்டா , ஈக்கோஸ்போர்ட் , டஸ்ட்டர் , டெரோனோ மற்றும் எஸ் க்ராஸ் போன்ற மாடல்களுக்கு சிம்ம சொப்பனமாக TUV300 எஸ்யூவி விளங்கும்.

Mahindra TUV300 compact SUV Spy pictures and details

image credits : autocarindia , anything on wheels

Exit mobile version