Automobile Tamilan

மாருதியின் இக்னிஸ் காருக்கு அமோக வரவேற்பு

சமீபத்தில் விற்பனைக்கு வந்த மாருதியின் இக்னிஸ் காருக்கு 10,000த்திற்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளதால் இக்னிஸ் காருக்கான காத்திருப்பு காலம் 8 முதல் 10 வாரங்கள் வரை அதிகரித்துள்ளது.

மாருதியின் இக்னிஸ்

ஹேட்ச்பேக் மற்றும் எஸ்யூவி ரக மாடல்களின் கலவையில் வந்த இக்னிஸ் மாடலில்  83 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் என்ஜின் மற்றும் 75 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் என இரு என்ஜினிலும் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் அதாவது மாருதி ஏஜிஎஸ் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

பெட்ரோல் இக்னிஸ் காரின் விலை ரூ.  4.59-6.69 லட்சம் வரையிலும் , பெட்ரோல் ஏஎம்டி விலை ரூ. 5.74-6.30 லட்சம் வரையும் அமைந்துள்ளது.  டீசல் இக்னிஸ் காரின் விலை ரூ. 6.39-7.80 லட்சம் வரையும் இக்னிஸ் டீசல் ஏஎம்டி மாடல்கள் விலை ரூ. 6.94-7.46 லட்சம் வரையும் அமைந்துள்ளது.

முழு விபரம் படிக்க – மாருதி இக்னிஸ் கார் விபரம்

இதுவரை 10,000த்துக்கு மேற்பட்ட முன்பதிவுகளை கடந்துள்ளதால் விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் பலேனோ கார்களை போன்ற அபரிதமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யும் பட்டியிலில் இக்னிஸ் இணைய வாய்ப்புள்ளது. தற்பொழுதைய நிலவரப்படிகாருக்கான காத்திருப்பு காலம் 8 முதல் 10 வாரங்கள் அதாவது 2 முதல் 3 மாதங்கள் வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வருகின்ற பிப்ரவரி முதல் வாரத்தில் உற்பத்தி தொடங்கப்பட உள்ள சுஸூகி குஜராத் ஆலையின் வாயிலாக இக்னிஸ் காரும் உற்பத்தி செய்யப்பட உள்ளதால் காத்திருப்பு காலம் குறைய தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

படிக்க – இக்னிஸ் காரின் முதல்பார்வை

 

Exit mobile version