Home Auto News

மாருதியின் செலிரியோ டீசல் மாடல் நீக்கம்

மாருதியின் செலிரியோ ஹேட்ச்பேக் மாடலின் டீசல் காரை சந்தையிலிருந்து நீக்கியுள்ளது. இந்தியாவின் முதல் பெட்ரோல் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலாக செலிரியோ விளங்குகின்றது.

மாருதியின் செலிரியோ

குறைந்த 47 பிஎச்பி பவரை அளிக்கும் 800சிசி எஞ்சினை பெற்றிருந்த மாருதியின் செலிரியோ டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 27.62 கிமீ ஆக இருந்தபொழுதும் கூடுதலான விலை மற்றும் பெரிதான வரவேற்பினை பெற தவறியதாலும் ஜனவரி 2017 முதல் டீலர்களுக்கு டீசல் செலிரியோ வருகை நிறுத்தப்பட்டு விட்டதாகவும் தற்பொழுது அலுவல் இணையத்திலும் டீசல் மாடலை மாருதி நீக்கியுள்ளது.

பெரும்பாலான மாருதியின் கார்களில் டீசல் வேரியன்டில் ஆஸ்தான எஞ்சினாக ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் எஞ்சின் மாடலே பொருத்தப்பட்டுள்ளது. குறைந்த சிசியில் இடம்பெற்றிருந்த டீசல் எஞ்சினும் நீக்கப்பட்டிருந்தாலும் இதே எஞ்சின் தற்பொழுது மாருதியின் சூப்பர் கேரி மாடலில் மட்டுமே இடம்பெற்றுள்ளது. செலிரியோ பெட்ரோல் மாடல் மிக சிறப்பான ஆதரவுடன் சந்தையில் தொடர்கின்றது.

Exit mobile version