Automobile Tamilan

மாருதி சியாஸ் , பலேனோ விற்பனை சாதனை

மாருதி சுஸூகி நிறுவனத்தின் மாருதி சியாஸ் மற்றும் மாருதி பலேனோ கார்கள் புதிய விற்பனை மைல்கல்லை எட்டியுள்ளது. மிக குறைவான காலத்திலே மாருதி பலேனோ ஹேட்ச்பேக் கார் 75,000 என்ற விற்பனை இலக்கினை கடந்துள்ளது. மேலும் சியாஸ் கார் 1 லட்சம் என்ற இலக்கினை கடந்துள்ளது.

maruti-suzuki-baleno-rs

ஸ்விஃப்ட் காருக்கு மேலாக நிலைநிறுத்தப்பட்டுள்ள மாருதி பெலேனோ கார் மிக வேகமாக விற்பனை எண்ணிக்கையில் வளர்ந்து வருகின்றது. பிரிமியம் ஹேட்ச்பேக் பிரவில் வெளியிடப்பட்ட பலேனோ கார் மிக சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களுடனும் சவாலான விலையில் அமைந்துள்ளதால் போடியாளரான எலைட் ஐ20 காரை பின்னுக்கு தள்ளியுள்ளது.

[irp posts=”2549″ name=”மாருதி பலேனோ கார் : சிறப்பு அம்சங்கள் என்ன ?”]

கடந்த 8 மாதங்களுக்கு முன்னதாக சந்தையில் நுழைந்த மாருதி பலேனோ கார் மிக விரைவாக 1 லட்சத்துக்கு மேற்பட்ட முன்பதிவுகளை கடந்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக மாதம் 10,000 கார்களுக்கு மேல் டெலிவரிகொடுக்கப்பட்டு வந்தாலும் காத்திருப்பு காலம் 6 முதல் 8 மாதங்கள் வரை அதிகரித்தே உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் 100 நாடுகளுக்கு இந்தியாவினை தலைமையாக கொண்டு ஏற்றுமதி செய்யப்பட உள்ள நிலையில் இதுவரை 3400 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சந்தையில் உள்ள மாருதி சுஸூகி சியாஸ் செடான் கார் 1 லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. ஹோண்டா சிட்டி காருக்கு போட்டியாக நிலைநிறுத்தப்பட்டிருக்கும் மாருதி சியாஸ் காரும் நல்ல வரவேற்பினை பெற்ற செடான் ரக மாடலாக விளங்குகின்றது.

Exit mobile version