Automobile Tamilan

மாருதி சுசூகி இக்னிஸ் கார் தீபாவளி அறிமுகம்

வருகின்ற பண்டிகை காலத்தில் பல புதிய மற்றும்மேம்படுத்தப்பட்ட மாடல்கள் வெளிவரவுள்ள நிலையில் மாருதி சுசூகி இக்னிஸ் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

maruti-suzuki-IGNIS-concept

பலெனோ மற்றும் விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார்களின் அபரிதமான வரவேற்பினால் இக்னிஸ் க்ராஸ்ஓவர் மாடல் காலதாமதமாக வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அறிவிப்பில் எந்த மாற்றங்களும் இல்லாமல் பண்டிகை காலத்தை ஒட்டி இக்னிஸ் வருவது உறுதியாகியுள்ளது.

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கின் வாயிலாக இந்திய சந்தையில் காட்சிப்படுத்தப்பட்ட மாருதி இக்னிஸ் கார் மிகசிறப்பான வடிவ தாத்பரியங்களுடன் 4மீட்டருக்கு குறைவான நீளத்தில் க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடலாக விளங்குகின்றது. விற்பனையில் உள்ள மஹிந்திரா கேயூவி 100 காருக்கு நேரடியான போட்டி மாடலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இக்னிஸ் காரின் அளவுகள் நீளம் 3700மிமீ , அகலம் 1660மிமீ மற்றும் உயரம் 1595மிமீ ஆகும். இதன் வீல்பேஸ் 2438மிமீ ஆகும். ஜப்பானிய வடிவ தாத்பரிங்களை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ள இக்னிஸ் காரில் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் மற்றும் புராஜெக்டர் முகப்பு விளக்குகள் போன்றவற்றை பெற்றுள்ளது.

ஜப்பான் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்ற இக்னிஸ் காரில் 4வீல் டிரைவ் ஆப்ஷன் , ஹீல் அசிஸ்ட் , முன் ,பின் மற்றும் பக்கவாட்டில் பார்க்கிங் செய்ய உதவும் கேமராக்கள் , லேன் மேனேஜ்மென்ட் போன்ற வசதிகளுடன் சுஸூகி அடாப்டிவ் டியூவல்  கேமரா பிரேக்கிங் சிஸ்டம் (Suzuki’s adaptive Dual Camera Breaking system – DCBS) உள்ளது.

இந்திய சந்தையில் இவற்றில் உள்ள பெரும்பாலான வசதிகள் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் முன்பக்க இரட்டை காற்றுப்பை , ஏபிஎஸ் இபிடி போன்றவை அனைத்து வேரியண்டிலும் இடம்பெற்றிருக்கலாம். ஆல்வீல் டிரைவ் ஆப்ஷனலாக கிடைக்கலாம். முதற்கட்டமாக 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் எஞ்சின்ஆப்ஷனை பெறும் வாய்ப்புள்ளது.

மாருதி சுஸூகி இக்னிஸ் கார் விலை ரூ. 5 லட்சம் முதல் ரூ.7.50 லட்சத்துக்குள் அமைய வாய்ப்புகள் உள்ளது. 2016 பாரீஸ் மோட்டார் ஷோ வாயிலாக ஐரோப்பியா சந்தையிலும் இக்னிஸ் வெளியாகவுள்ளது.

Exit mobile version