Categories: Auto News

மாருதி சுசூகி மினி எஸ்யூவி பெயர் இக்னிஸ்

மாருதி சுசூகி நிறுவனம் புதிய காம்பேக்ட ரக எஸ்யூவி தயாரிப்பில் தீவரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த மினி எஸ்யூவி காரை சுசூகி இக்னிஸ் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரலாம் என எதிர்பார்ப்புகள் வெளியாகியுள்ளது.
de56d suzuki ignis rendering

கடுமையான சவால்கள் நிறைந்த பிரிவாக உருவாகி வரும் தொடக்க நிலை எஸ்யூவி பிரிவில் உள்ள கார்களான ஈக்கோஸ்போர்ட் , டஸ்ட்டர் , க்ரெட்டா , வரவிருக்கும் பிஆர்-வி , டியூவி300  போன்ற கார்களுக்கு சவாலினை தரவல்ல இந்த புதிய இக்னிஸ் எஸ்யூவி அடுத்த வருடம் சந்தைக்கு வரலாம் என தெரிகின்றது.

இக்னிஸ் என்ற பெயரில் ஹேட்ச்பேக் காரினை ஐரோப்பியா நாடுகளில் 2006ம் ஆண்டு வரை விற்பனை செய்து வந்தது. இதன் பெயரில் தான் தற்பொழுது உருவாகி வரும் எஸ்யூவி வரலாம். மாருதி சுசூகி புதிய ஹேட்ச்பேக் காருக்கு கூட பழைய பலேனோ பெயரை வைத்தது போல இதற்க்கும் இந்த பெயரை வைத்திருக்கலாம்.

இக்னிஸ் என்ற பெயரில் உற்பத்தி நிலை கான்செப்ட் மாடலை சுசூகி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜினும் பொருத்தப்படலாம்.

Maruti Suzuki Ignis mini SUV concept

Share
Published by
MR.Durai
Tags: SUV