வருகின்ற 2017 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள மாருதி டிசையர் காரின் அடுத்த தலைமுறை மாடலின் வருகைக்கு முன்னதாக விற்பனையில் உள்ள டாக்சி ரக மாடலான மாருதி டிசையர் டூர் ரத்து செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து எக்கனாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் வருகின்ற மார்ச் 2017 முதல் மாருதி டிசையர் காரின் டாக்சி மாடலாக விளங்கும் டிசையர் டூர் காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் 2017 ஆம் ஆண்டு மாரச்சில் வருவதனை ஒட்டியே இந்த மாடல் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2012 முதல் விற்பனையில் உள்ள டிசையர் டூர் காரானது பெட்ரோல் (LXi) மற்றும் டீசல் (LDi) என இரு வேரியன்டிலும் டாக்சி வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற மாடலாக விளங்கிவருகின்றது. சமீபத்தில் ஜப்பான் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் இந்த மாடல் வரவுள்ளது.

மேலும் முதற்கட்டமாக இந்தியாவில் டிசையர் செடான் கார் அறிமுகம் மாரச் மாதமும் அதனை தொடர்ந்து அக்டோபர் 2017ல் புதிய ஸ்விப்ட் காரும் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இனி மாருதி டிசையர் டூர் மாடலுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வாய்ப்புள்ளதால் டாக்சி உரிமையாளர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.