தோற்றம்
தோற்றத்தில் 4 கார்களுமே சிறப்பான தோற்றத்துடன் அழகான வடிவங்களை பெற்றுள்ள பிரிமியம் ஹேட்ச்பேக்க் கார்களாகும். இவற்றில் பலேனோ காரில் மட்டும் எல்இடி பகல் நேர விளக்குகள் , புராஜெக்டர் விளக்குகளுடன் விளங்குகின்றது.
உட்புறம்
உட்புறத்தில் 4 கார்களுமே சிறப்பான ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளதாகும். இவற்றில் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் வசதி போலோ காரை தவிர மற்றவற்றில் உள்ளது. ஆப்பிள் கார் பிளே தொடர்புடன் இந்த பிரிவில் இந்தியாவின் முதல் காராக பலேனோ வந்துள்ளது.
என்ஜின்
பெட்ரோல் என்ஜின்
போலோ காரில் இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் உள்ளது. அவற்றில் 1.2 லிட்டர் TSI என்ஜின்டன் 105பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தி முன்னிலை வகிக்கின்றது. மேலும் 7 வேக டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் சிஸ்டம் உள்ளது.
பெலேனோ , ஜாஸ் , போலோ , எலைட் ஐ20 கார்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் கூடுதல் ஆற்றலை ஜாஸ் வழங்குகின்றது. இவற்றில் 5 வேக மெனுவல் மற்றும் சிவிடி கியர்பாகஸ் உள்ளது. எலைட் ஐ20 காரில் மட்டும் ஆட்டோ ஆப்ஷன் இல்லை.
மைலேஜ்
பலேனோ காரின் மைலேஜ் போட்டியாளர்களை விட கூடுதலான மைலேஜ் வழங்குகின்றது . அதாவது லிட்டருக்கு 21.4 கிமீ ஆகும்
மாருதி பலேனோ Vs எலைட் ஐ20 Vs ஜாஸ் Vs போலோ – பெட்ரோல் ஒப்பீடு
மைலேஜ் என்றால் தானாகவே மாருதி முன்னிலை பெறுகின்றது. பிரிமியம் ஹேட்பேக் கார்களில் அதிக மைலேஜ் தரக்கூடிய டீசல் கார் பெலேனோ இதன் மைலேஜ் லிட்டருக்கு 27.39கிமீ ஆகும். 0.9 கிமீ மட்டுமே குறைவாக ஹோண்டா ஜாஸ் மைலேஜ் உள்ளது.
மாருதி பலேனோ Vs எலைட் ஐ20 Vs ஜாஸ் Vs போலோ – டீசல் ஒப்பீடு
மாருதி பலேனோ Vs எலைட் ஐ20 Vs ஜாஸ் Vs போலோ – டீசல் ஒப்பீடு |
சிறப்பம்சங்கள்
இரட்டை முன்பக்க காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி போன்ற பாதுகாப்பு வணதிகள் அனைத்து மாடல்களிலும் பேஸ் வேரியண்டில் (ஐ20 மற்றும் ஜாஸ் பேஸ் வேரியண்டில் இல்லை ) கூட உள்ளது. தொடுதிரை அமைப்பு , நேவிகேஷன் கீலெஸ் என்ட்ரி , ஸ்டார்/ஸ்டாப் பொத்தான் போன்றவை அனைத்து டாப் வேரியண்டிலும் உள்ளது.
விலை
பெலேனோ விலை மிக சவாலாக அமைந்துள்ளதால் போட்டியாளர்கள் மிகுந்த சிரமத்தினை எதிர்கொள்ள வேண்டிஇருக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் போட்டியாளர்களை விட குறைவான விலையில் தொடங்கி நிறைவான வசதிகள் கொண்ட டாப் வேரியண்டில் கூட குறைவான விலையை பெற்றுள்ளது.
Maruti Baleno vs Hyundai i20 vs Honda Jazz vs VW Polo – Compare