Automobile Tamilan

மாருதி பூஸ்டர்ஜெட் இன்ஜின் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

இந்தியாவின் முதன்மையான மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிதாக வந்துள்ள மாருதி பலேனோ ஆர்எஸ் காரில் இடம்பெற்றுள்ள 100hp பவரை வெளிப்படுத்தும் மாருதி பூஸ்டர்ஜெட் இன்ஜின் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஃபோர்டு நிறுவனங்களின் ஈக்கோபூஸ்ட் என்ஜின் போன்றவற்றை போலவே சுசூகி நிறுவனத்தின் புதிய பூஸ்டர்ஜெட் என்ஜின் குறைவான சிசி கொண்டு அதிகப்படியான பவரை வெளிப்படுத்தக்கூடியதாக விளங்குகின்றது.

மாருதி 1.0 லிட்டர் நுட்ப விபரம்

என்ஜின்  (cc) 998
அதிகபட்ச பவர் (hp@rpm) 100.5/5500
அதிகபட்ச டார்க் (Nm@rpm) 150/1700-4500
எரிபொருள் பலன் (l) 37
எரிபொருள்வகை பெட்ரோல்
கேம்ஷாஃப்ட் DOHC
சிலிண்டர் எண்ணிக்கை 3

குறைந்த சிசி என்ஜினில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும் வகையில் டர்போசார்ஜர் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதிகப்படியான பவரை இந்த என்ஜின் வெளிப்படுத்துகின்றது. இந்த என்ஜின் பவர் மட்டுமல்லாமல் குறைவான மாசு உமிழ்வினையும் கொண்டதாக விளங்குகின்றது.

பவர் , மாசு உமிழ்வினை தவிர மிக முக்கியமாக விளங்கும் மற்றொரு அம்சம் எரிபொருள் சிக்கனமாகும். டர்போசார்ஜர் கொண்டு இயக்கப்படும் முறையில் உள்ள இந்த பெட்ரோல் என்ஜினில் அதிகப்படியான காற்றினை உறிஞ்சி மிகுந்த அழுத்தம் கொண்டு டைரக்ட் இன்ஜெக்ஷன் வாயிலாக செயல்படும்பொழுது எரிபொருள் முழுமையாக எரிந்து சிறப்பான பவரை வெளிப்படுத்துகின்றது.

இது குறித்தான மாருதி பூஸ்டர்ஜெட் இன்ஜின் வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version