இந்திய சந்தையில் மாருதி ரீட்ஸ் கார் நீக்கம்

இந்திய சந்தையிலிருந்து மாருதி ரீட்ஸ் கார் நீக்கப்படுவதாக மாருதியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் சந்தையில் இருக்கும் ரீட்ஸ் இதுவரை 4 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மாருதி ரீட்ஸ்

பிடிஐ செய்தி பிரிவுக்கு மாருதி சுசூகி நிறுவன செய்தி தொடர்பாளர் அளித்துள்ள கடந்த சில மாதங்களாகவே ரீட்ஸ் கார் நீக்கப்படலாம் என செய்திகள் வெளிவந்த நிலையில் தற்பொழுது அது உறுதியாகியுள்ளது. சந்தையில் ஆரம்ப கட்டத்தில் தனிநபர் பயன்பாட்டினர் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்த நிலை கடந்த சில வருடங்களாகவே கேப் ஆப்ரேட்டர்களான ஓலா மற்றும் உபேர் போன்ற நிறுவனங்களின் டாக்சி சேவைகளுக்கே சிஎன்ஜி மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சந்தையிலிருந்து நீக்கப்படுவதாக தெரிகின்றது.

சந்தையிலிருந்து மாருதி ரீட்ஸ் கார் நீக்கப்பட்டாலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ரீட்ஸ் காரில் 1.2 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சினுடன் 87 PS பவர் மற்றும் 114 Nm டார்க் வெளிப்படுத்தும். மேலும் ஃபியட் 1.3 லிட்டர் DDiS டீசல் எஞ்சினுடன் 75 PS பவர் மற்றும் 190 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது.

புதிய மாறுதல்களுக்கு ஏற்ப புதிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதால் விற்பனையில் உள்ள பழைய மாடல்களை மாற்றவோஅல்லது நீக்கவோ மாருதி சுசூகி திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த இக்னிஸ் கார் அமோக ஆதரவினை பெற்றுள்ளது.

Exit mobile version