Automobile Tamil

பிரபலமான மாருதி 800 கார் விற்பனையில் உள்ளதா ? எங்கே ..

இந்தியாவின் பிரசத்தி பெற்ற கார்களில் ஒன்றான மாருதி 800 கார் விற்பனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய ஆட்டோமொபைல் வரலாற்றில் முக்கிய இடத்தினை மாருதி 800 கார் பெற்றுள்ளது.

Maruti-800-as-Jiangnan-TT-in-china

இந்தியாவின் அதிகம் விற்பனையான கார் என்ற பெருமைக்குரிய காராக பல ஆண்டுகளாக இருந்து வந்த 800 கார் பல மாதங்களுக்கு முன்னதாக மாருதி சுஸூகி ஆல்ட்டோ 800 காரிடம் விட்டுகொடுத்தது. பல முதல் தலைமுறை கார் வாடிக்கையாளர்களின் அடையாளமாக இருந்து வந்த 800 கார் 1983 ஆம் ஆண்டு முதல் 25 லட்சத்துக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்களை பெற்றிருந்த நிலையில் 2014ஆம் வருடத்தின் தொடக்கத்தில் இந்திய சந்தையில் விடைபெற்றது.

தற்பொழுது மாருதி சுஸூகி 800 காரின் அதே மாடல் சீனாவின் விலை குறைந்த கார் மாடலாக அதாவது 15,800 யுவான் மதிப்பில் இந்திய ரூபாயில் 1.67 லட்சம் விலையில் ஜியாஞ்னன் TT என்ற பெயரில் விற்பனை செய்யப்படு வருகின்றது.

பல கார்களின் குளோனிங் மாடலை தயாரிக்கும் ஜோட்ய் ஆட்டோமொபைல் குழுமத்தின் அங்கமான ஜியாஞ்னன் நிறுவனமே 800 காரின் டிடி என்ற பெயரில் தயாரிக்கின்றது. மாருதி 800 காரின் தோற்றத்திலே இந்த கார் அமைய காரணம் ஜோட்ய் நிறுவனம் சுஸூகி நிறுவனத்திடம் முறைப்படி அனுமதி பெற்றுள்ளது.

36 hp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 800சிசி 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 60 Nm வெளிப்படுத்தும். இதில் 4 வேக மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது. ஜியாஞ்னன் TT காரின் உச்சவேகம் மணிக்கு 120கிமீ ஆகும். மைலேஜ் லிட்டருக்கு 19.23 கிமீ ஆகும்.

சீனாவின் ஊரக மற்றும் சிறிய நகரங்களில்  ஜியாஞ்னன் TT  கார் விற்பனை ஆகிவருகின்றது. இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக மாருதி 800 என்றுமே விளங்கும். ஃபோர்பஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள சீனாவின் மலிவு விலை கார் என்ற பெயரில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

[Source – Forbes.com]

Exit mobile version