Automobile Tamilan

பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர் வருகை விபரம்

இந்தியாவின் அடையாளங்களில் பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டருக்கு தனியான இடம் உள்ளதை எவரும் மறுப்பதற்க்கில்லை. சேட்டக் ஸ்கூட்டரை நவீன வசதிகளுடன் மீண்டும் சந்தைக்கு வரும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது.

பஜாஜ் சேட்டக் ஸ்கூட்டர்

சேட்டக் ஸ்கூட்டர் என்றால் நினைவுக்கு வருவது ‘ ஹமாரா பஜாஜ் ‘ வார்த்தைதான். பல சிறப்புகளை கொண்ட ஸ்கூட்டராக விளங்கிய சேட்டக் மிக குறைவான விற்பனை எண்ணிக்கையின் காரணமாக 2009 ஆம் ஆண்டில் தனது பயணத்தினை நிறுத்திக்கொண்டது.

புதிய சேட்டக்

நவீன வடிவம் மற்றும் கியர் இல்லாத ஸ்கூட்டர்களின் வரவினால் சந்தையை இழந்த சேட்டக் மீண்டும் புதிய பொலிவுடன் காலத்திற்க்கேற்ப பல மாற்றங்களுடன் பயணத்தினை தொடங்க உள்ளது.

நவீன வசதிகள் மற்றும் கியர் இல்லாத ஸ்கூட்டராகவும் தோற்றத்தில் பழைய வடிவத்தினை தொடர்ந்து சில மாற்றங்கள் மட்டுமே செய்ய வாய்ப்புகள் உள்ளது.  மேலும் 125சிசி அல்லது 150சிசி என்ஜின் பொருத்தப்படலாம். மீண்டும் பஜாஜ் சேட்டக் சந்தையில் நுழைந்தால் பஜாஜ் ஆட்டோ இழந்த ஸ்கூட்டர் சந்தையை கைபற்றுவதற்க்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கிளாசிக் தோற்ற அமைப்பில் எதிர்பார்க்கப்படுகின்ற சேட்டக் ஸ்கூட்டர் வெஸ்பா மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் காப்பபுரிமை பதிவிற்கு காத்திருக்கும் பாகங்கள் மற்றும் சேட்டக் தோற்ற , ஹெட்லேம்ப் , டெயில் லேம்ப் , இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் சுவிட்சுகள் படங்கள் கசிந்துள்ளது. இந்த ஆண்டின் மத்தியில் மீண்டும் சேட்டக் விற்பனைக்கு வரக்கூடும்.

புதிய சேட்டக் காப்புரிமை படங்கள்

image source- motoroctane

Exit mobile version