Automobile Tamil

மீண்டும் மிட்சுபிஷி லேனசர் இந்தியா வருகை ?

இந்திய சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்ற மிட்சுபிஷி லேன்சர் கார் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் உள்ளதாக மிட்சுபிஷி ,  நிஸான்- ரெனோ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி காரல் கோஸன் தெரிவித்துள்ளார்.

மிட்சுபிஷி லேனசர்

சமீபத்தில் ஆட்டோகார் இந்தியா இணையதளத்துக்கு அளித்துள்ள பிரத்யேகமான பேட்டியில் இந்திய சந்தையில் மிட்சுபிஷி  நிறுவனத்தை மிக சிறப்பான முறையில் நிலை நிறுத்தும் நோக்கில் செயல்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு மேலாக  இந்திய சந்தையில் உள்ள மிட்சுபிஷி ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்த பஜெரோ மற்றும் லேன்சர் கார்கள் அமோக வரவேற்பினை பெற்றிருந்த நிலையில் சில வருடங்களில் வெளியான பல புதிய மாடல்கள் லேன்சர் மாடலை ஒரங்கட்டியது. மிட்சுபிஷி பெரிதாக இந்திய சந்தையில் கவனம் செலுத்த தவறியது. தற்பொழுது முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடல்களாக மான்டிரியோ எஸ்யூவி மற்றும் பஜெரோ ஸ்போர்ட் எஸ்யூவி மாடலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

ரெனோ க்விட் மற்றும் டட்சன் ரெடி-கோ கார்கள் வடிவமைக்கப்பட்ட CMF-A பிளாட்பாரத்தில் பட்ஜெட் விலை கொண்ட கார்களை மிட்சுபிஷி பிராண்டில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மீண்டும் லேன்சர் இந்திய வர வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்விக்கு வரும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் எப்பொழுது வரும் என்பதற்கான காலகட்டத்தை குறிப்பிடவில்லை.

லேன்சர் உங்களுக்கு பிடிக்குமா ? உங்கள் கருத்த பதிவு செய்யுங்க…

Exit mobile version