மெர்சிடிஸ் ஏஎம்ஜி C 63 S செப்டம்பர் 3 முதல்

வரும் செப்டம்பர் 3ந் தேதி மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி C 63 S பெர்ஃபாமென்ஸ் கார் விற்பனைக்கு வருகின்றது. சி கிளாஸ் செடான் காரை அடிப்படையாக பெர்ஃபாமென்ஸ் AMG C 63 S மாடலாகும்.
மெர்சிடிஸ் ஏஎம்ஜி C 63 S
மெர்சிடிஸ் ஏஎம்ஜி C 63 S

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ரக வரிசையில் அறிமுகம் செய்யப்பட உள்ள 10வது மாடலாகும். இந்த வருடத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 15 மாடல்களில் இது 11வது மாடலாகும்.

503பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4.0 லிட்டர் ட்வீன் டர்போ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 7 வேக தானியங்கி கியர்பாகசினை பயன்படுத்தியுள்ளனர்.

0 முதல் 100கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு 4 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். மெர்சிடிஸ் ஏஎம்ஜி C 63 S காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ ஆக எலக்ட்ரானிக் கொண்டு வரைய்யறுக்கப்பட்டுள்ளது.

சி கிளாஸ் செடானில் இருந்து மாறுதல்களை தரும் வகையில் ஸ்போர்ட்டிவ் பம்பர் , ஆலாய் வீல் போன்ற ஏஎம்ஜி பாடி கிட்களை பெற்றுள்ளது. உட்புறத்தில் ஸ்போர்ட்டிவ் இருக்கைகள் மற்றும் சிறப்பான சொகுசு தன்மையை வழங்கும்.

Mercedes-AMG C 63 S to launch on September 3  , 2015

Exit mobile version