மெர்சிடிஸ் GLC எஸ்யுவி கார் விற்பனைக்கு வந்தது

0

மெர்சிடிஸ் பென்ஸ் GLC எஸ்யுவி கார் ரூ. 50.70 லட்சம் தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் GLC எஸ்யுவி கார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

2016-Mercedes-GLC

Google News

இந்தியாவில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சி வாயிலாக பார்வைக்கு வந்த ஜிஎல்சி எஸ்யூவி கார் சி கிளாஸ் காரின் தளத்தில் உருவாக்கப்பட்ட மாடலாகும். டீசல் கார் தடைகளை தொடர்ந்து மெர்சிடிஸ் டீசல் மாடலுடன் கூடுதலாக பெட்ரோல் மாடலை வெளியிட்டுள்ளது.

245 hp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இஞ்ஜின் 370NM இழுவைதிறனை வெளிப்படுத்தும். 170 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.1 லிட்டர் டீசல் என்ஜின் இழுவைதிறன் 400Nm ஆகும். இரண்டு என்ஜினிலும் 9 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.  4 மேட்டிக் ஆல் வீல் டிரைவினை பெற்றுள்ளது.

ஜிஎல்ஏ மற்றும் ஜிஎல்இ எஸ்யூவி கார்களுக்கு இடையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜிஎல்சி கார் மிக நேரத்தியான ஸ்டைலிங் அம்சங்களுடன் தோற்றத்தினை பெரும்பாலும் சி கிளாஸ் செடான் காரின் தோற்ற அமைப்பினை பெற்று கொண்டுள்ளது. உட்புறத்தில் சி கிளாஸ் காரினை விட கூடுதலான வீல்பேஸ் பெற்று சிறப்பான இடவசதியுடன் கமென்ட் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பினை பெற்றுள்ளது.

ஆடி Q5 மற்றும் பிஎம்டபிள்யூ X3 போன்ற எஸ்யூவி கார்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் மாடலாக மெர்சிடிஸ்  GLC எஸ்யுவி விளங்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் GLC எஸ்யுவி விலை விபரம்

மெர்சிடிஸ் பென்ஸ் GLC 220d – ரூ.50.70 லட்சம் (டீசல்)

மெர்சிடிஸ் பென்ஸ் GLC 300 – ரூ.50.90 லட்சம் (பெட்ரோல்)

( விலை எக்ஸ்ஷோரூம் புனே )