மேன் CLA எவோ டிரக் வரிசை அறிமுகம்

0

இந்தியாவின் மேன் டிரக் நிறுவனம் இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட மேன் CLA எவோ டிரக் வரிசையில் இரு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. மேன் CLA EVO 25.300 6×4 BS4 டிப்பர் மற்றும் CLA EVO 49.300 6X4 டிரக் போன்றவை ஆகும்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வரும் மேன் டிரக்ஸ் நிறுவனத்தின் இந்தியா பிரிவு சொந்த முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ள சிஎல்ஏ எவோ டிரக்குகள் மத்தியபிரதேசத்தில் அமைந்துள்ள பிதாம்பூர் மேன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது. சிஎல்ஏ எவோ (Cargo Line A EVO) வரிசை டிரக்குகள் இந்தியா மட்டுமல்லாமல் ஆசியா , மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பரிக்கா போன்றவைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

Google News

சிஎல்ஏ டிரக் அறிமுக விழாவில் இந்தியா மேன் டிரக்ஸ் சேர்மேன் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு.ஜார்ஜ் மொமர்ட்ஸ்  பேசுகையில் சிஎல்ஏ வரிசை டிரக்குகள் அறிமுகம் இந்தியா மேன் நிறுவனத்துக்கு புதிய மைல்கல்லாக அமையும்.இதில் இடம்பெற்றுள்ள சக்திவாய்ந்த 300 ஹெச்பி எஞ்சின் சிறப்பான செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். இந்த டிரக்குகளில் இடம்பெற்றுள்ள இரட்டை ஹெட்லேம்ப் மற்றும் பகல் நேர ரன்னிங் விளக்குகள் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேன் CLA EVO 25.300 6×4 BS4 டிப்பர்

CLA EVO 25.300 6×4 BS4 டிப்பர் லாரியில் 300HP பவரை வெளிப்படுத்தும் மேன் D-0836 டர்போசார்ஜ்டு இன்டர்கூலர் BSIV எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மிக சிறப்பான டிராக்ஷன் கன்டோரல் கொண்ட இந்த டிரக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் சுரங்க பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும்.இந்த டிரக்கின் டிரைவர் கேபின் மிக சிறப்பான தரத்தை பெற்று ஏசி ஆப்ஷனலாக கிடைக்கும்.

மேன் CLA EVO 49.300 6×4 BS4 டிராக்டர் ஹெட்

CLA EVO 49.300 6×4 BS4 லாரியில் 300HP பவரை வெளிப்படுத்தும் மேன் D-0836 டர்போசார்ஜ்டு இன்டர்கூலர் BSIV எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மிக சிறப்பான டிராக்ஷன் கன்டோரல் கொண்ட இந்த டிரக்கின் கிரவுண்ட் கிளியரன்ஸ் சுரங்க பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் அமைந்திருக்கும்.இந்த டிரக்கின் டிரைவர் கேபின் மிக சிறப்பான தரத்தை பெற்று சிலிப்பர் கேபின் மற்றும் சிங்கிள் பெட் வசதிகள் பெற்றிருக்கும்.

மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய மேன் டிரக் சர்வீஸ் மையங்கள் 60 இடங்களில் உள்ளது.