யமஹா க்ரக்ஸ் , ஃபேஸர் , ரே ஸ்கூட்டர் விடைபெற்றது

0

யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனம் யமஹா க்ரக்ஸ் , யமஹா ஃபேஸர் , யமஹா ரே ஸ்கூட்டர் போன்றவற்றை சந்தையில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் முன்பே FZ-S கார்புரேட்டர் மாடலை நீக்கியிருந்தது.

yamaha-crux-bike

Google News

சமீபத்தில் யமஹா ஆர்15 பைக்கின் புதுப்பிக்கப்பட்ட வண்ணங்கள் கொண்ட மாடல் விற்பனைக்கு வந்திருந்தது. அதனை தொடர்ந்து SZ-RR பைக்கிலும் புதிய வண்ணங்களை பெற்றதை முன்பே வெளியிட்டுருந்தோம்.

தற்பொழுது யமஹா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 100சிசி பிரிவில் விற்பனையில் இருந்த யமஹா க்ரக்ஸ் மாடலை தனது இணையத்திலும் கடந்த மாத விற்பனையில் எந்த எண்ணிக்கையும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்யூட்டோ 125 பைக்கின் வெற்றியை தொடர்ந்து இந்த முடிவினை யமஹா எடுத்துள்ளது.

ஃபேஸர் கார்புரேட்டர் மாடலை தனது இணைய பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. மற்றபடி ஃபேஸர் FI பைக் தொடர்ந்து விற்பனையில் இருக்கும். மேலும். யமஹா நிறுவனத்தின் முதல் ஸ்கூட்டராக விற்பனைக்கு வந்த பெண்களை மையப்படுத்தி வந்த ரே ஸ்கூட்டரினை நிறுத்தியுள்ளது. மற்றபடி ரே இசட் , ஆல்ஃபா , ஃபேசினோ போன்ற ஸ்கூட்டர்கள் தொடர்ந்து விற்பனையில் இருக்கும்.

டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் காட்சிக்கு வந்த டிஸ்க் பிரேக்கினை கொண்ட ரே ZR ஸ்கூட்டர் அடுத்த சில மாதங்களில் வரவுள்ளது.

yamaha-ray