ராயல் என்பீல்டு 750சிசி மோட்டார்சைக்கிள் மார்ச் 2017ல்

கம்பீரமான பைக்குகளுக்கு அடையாளமாக விளங்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய ராயல் என்பீல்டு 750சிசி மோட்டார்சைக்கிள் மாடலை மார்ச் 2017-யில் விற்பனைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது தீவரமான சோதனை ஓட்டத்தில் உள்ள 750சிசி பைக் மாடலில் ட்வின் சிலிண்டர் எஞ்சின் பொருத்தப்பட்டு மிக சிறப்பான பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தக் கூடிய மாடலாக ஹார்லி டேவிட்சன் ஸ்டீரிட் 750சிசி பைக் மாடலுக்கு சவாலாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான சோதனை ஓட்ட படங்களினை அடிப்படையாக கொண்டு பார்த்தால் ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி மோட்டார்சைக்கிள் மாடலை அடிப்படையாக கொண்டதாக அமைந்திருக்கும் என தெரிகின்றது. வெளியான சில தகவல்களின் அடிப்படையில் அதிகபட்சமாக அதிகபட்சமாக 50 முதல் 60 என்எம் வரை டார்க் திறனை வெளிப்படுத்தும் மாடலாக இருக்கலாம்.

வரும் மார்ச் மாதத்திற்குள் விற்பனைக்கு வரவுள்ள 750சிசி மோட்டார்சைக்கிள் மாடல் வாயிலாக இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் நடுத்தர பிரிமியம் ரகத்தில்  சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்வதற்கான முயற்சில் ராயல் என்பீல்டு தீவரமாக உள்ளது.

Share