ரூ.96,000 விலை சரிந்த ரெனோ லாட்ஜி எம்பிவி கார்

எம்பிவி ரக சந்தையில் முன்னனி வகிக்கும் இனோவா க்ரிஸ்டா காருக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்ட ரெனோ லாட்ஜி எம்பிவி காருக்கு ரூ.96,0000 வரை அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது. விலை சரிவின் காரணமாக டாக்சி சந்தையில் நல்ல வரவேற்பினை பெறும் என நம்பப்படுகின்றது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெனாலட் லாட்ஜி தொடக்க வரவேற்பினை பெற்றாலும் த்தொடர்ச்சியாக விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றது. லாட்ஜி 85PS மற்றும் 110PS என இரு விதமான ஆற்றல் வெளிப்படுத்தும் 1.5லி டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

தொடக்க நிலை மாடல்களான 85பிஎஸ் வேரியண்ட் வகைகள் மட்டுமே விலை குறைக்கப்பட்டுள்ளது. 110பிஎஸ்வேரியண்ட் விலையில் எந்த மாற்றங்களும் இல்லாமல் உள்ளது. 8 இருக்கை ஆப்ஷனுடன் போட்டியாளர்களை விட சிறப்பான இடவசதியை பெற்றிருக்கும் ரெனோ லாட்ஜி தொடக்கவிலை தற்பொழுது ரூ.7.59 லட்சத்தில் தொடங்குகின்றது. ரூ.34,000 முதல் ரூ.96,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.

ரெனோ லாட்ஜி புதிய விலை பட்டியல்

85hp STD – ரூ.7.59  லட்சம் (சரிவு ரூ.96,000)

85hp RXE – ரூ.8.57  லட்சம் (சரிவு ரூ.80,000)

85hp RXE 7 SEATER –  ரூ.8.57  லட்சம் (சரிவு ரூ.80,000)

85hp RXL – ரூ.9.44  லட்சம்  (சரிவு ரூ.55,000)

85hp RXZ –  ரூ.10.99  லட்சம் (சரிவு ரூ.34,000)

( அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை பட்டியல் )

பிரசத்தி பெற்ற இனோவா க்ரிஸ்டா , மாருதி எர்டிகா , மொபிலியோ , சைலோ , என்ஜாய் போன்ற எம்பிவி கார்கள் லாட்ஜிக்கு போட்டியாக உள்ளது.

Exit mobile version