Automobile Tamilan

ரெடி-கோ vs க்விட் vs ஆல்ட்டோ 800 vs இயான் – ஒப்பீடு

பிரசத்தி பெற்ற தொடக்கநிலை ஹேட்ச்பேக் கார்களான ஆல்ட்டோ 800 , க்விட் , இயான் போன்ற கார்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள டட்ஸன் ரெடி-கோ காருடன் தொழில்நுட்ப விபரங்களை ரெடி-கோ vs க்விட் vs ஆல்ட்டோ 800  vs இயான்  – ஒப்பீடு செய்து தெரிந்துகொள்ளலாம்.

Maruti-Alto-800

தோற்றம்

ரெனோ க்விட் கார் மிக சிறப்பான க்ராஸ்ஓவர் கார்களின் தோற்றமைப்பில் அமைந்து நல்ல வரவேற்பினை பெற்றது போலவே ரெடி-கோ காரும் க்ராஸ்ஓவர் தாத்பரியத்திலே சற்று கூடுதலான உயரம் மற்றும் நேர்த்தியான ஸ்டைலில் அமைந்துள்ளது. புதிய ஆல்ட்டோ 800 கார் முகப்பு பம்பர் போன்றவற்றினை மேம்படுத்தி முந்தைய மாடலைவிட குறைந்த விலை வந்துள்ளது. ஹூண்டாய் இயான் கார் பெரிதாக மாற்றங்களை சந்திக்காமலே உள்ளது.

உட்புறம்

க்விட் காரின் டாப் வேரியண்டில் தொடுதிரை அமைப்பு , ஸ்டைலிசான டேஸ்போர்டு என மற்றவற்றை பின்னுக்கு தள்ளகின்றது. ஆனாலும் மேம்படுத்தப்பட்ட ஆல்ட்டோ 800 காரின் உட்புறம் மெருகேற்றப்பட்டு சிறப்பான கவர்ச்சியை வெளிப்படுத்துகின்றது. ரெடி-கோ கார் பட்ஜெட் கார் என்பதனால் திறந்தநிலை க்ளோவ்பாக்ஸ் பீஜ் வண்ணத்திலான டேஸ்போர்டினை பெற்றுவிளங்குகின்றது.

அளவுகள் ஒப்பீடு

 

டட்ஸன்

 ரெடி-கோ

 ரெனோ க்விட் மாருதி ஆல்ட்டோ 800 ஹூண்டாய் இயான் 0.8லி
நீளம் 3429 மிமீ 3679 மிமீ 3430 மிமீ 3495 மிமீ
அகலம் 1560 மிமீ 1579 மிமீ 1490 மிமீ 1550 மிமீ
உயரம் 1541 மிமீ 1478 மிமீ 1475 மிமீ 1500 மிமீ
வீல்பேஸ் 2348 மிமீ 2422 மிமீ 2360 மிமீ 2380 மிமீ
கிரவுண்ட் கிளியரன்ஸ் 185 மிமீ 180 மிமீ 160 மிமீ 170 மிமீ
பூட் ஸ்பேஸ்  222 லிட்டர் 300 லிட்டர் 187 லிட்டர் 220 லிட்டர்
டர்னிங் ரேடியஸ் 4.73 மீ NA 4.6 மீ NA
எரிபொருள் அளவு 28 லிட்டர் 28 லிட்டர் 35 லிட்டர் 32 லிட்டர்

என்ஜின் மற்றும் மைலேஜ் – ஒப்பீடு

 என்ஜின் 3 சிலிண்டர் பெட்ரோல் 3 சிலிண்டர் பெட்ரோல் 3 சிலிண்டர் பெட்ரோல் 3 சிலிண்டர் பெட்ரோல்
சிசி 799 cc 799 cc 796 cc 814 cc
 கியர்பாக்ஸ் 5-MT 5-MT 5-MT 5-MT
 ஆற்றல் 54 PS @ 5678 rpm 54 PS @ 5678 rpm 48 PS @ 6,000 rpm 56 PS @ 5,500 rpm
 இழுவைதிறன் 72 Nm @ 4386 rpm 72 Nm @ 4386 rpm 69 Nm @ 3500 rpm 74.5 Nm @ 4,000 rpm
 மைலேஜ் KM/L 25.17 25.17 24.7 21.1
 எடை ( கிலோ ) 640 (approx) 660 (approx) 695 760
 விலை (லட்சம்) 2.39 – 3.50 (ஊகம்)  2.62 – 3.67 2.49 – 3.34 3.24 – 4.42

க்விட் மற்றும் ரெடி-கோ கார்கள் ஒரே பெட்ரோல் என்ஜினை பகிர்ந்துகொண்டுள்ள நிலையில் ஆற்றல் மற்றும் செயல்திறன் , மைலேஜ் என அனைத்தும் சமமாகவே உள்ளது. மற்ற மூன்று கார்களை விட இயான் அனைத்திலும் பின்தங்கியே உள்ளது.

பல ஆண்டுகளாக சந்தையில் முடிசூடா மன்னாக திகழ்ந்து வரும் மாருதி சுசூகி ஆல்ட்டோ 800 கார் சந்தை க்விட் காரின் வரவால் சற்று தடுமாற தொடங்கியுள்ளது. ரெனோ நிறுவனத்தின் குறைவான டீலர்கள் மாருதியின் வலுவான டீலர் நெட்வொர்க்கில் ஈடுகொடுக்க முடியாமல் தினறும் நிலையில் ரெனோ  க்விட் மற்றும் நிசான் டட்ஸன் ரெடி-கோ கார்கள் தள்ளப்படும்.

பட்ஜெட் விலையில் அமைந்துள்ள ரெடி-கோ நிச்சியமாக ஆல்ட்டோ 800 காருக்கு நல்ல சவாலாக அமைந்துள்ளது.

Maruti alto 800 photo gallery

[envira-gallery id=”7471″]

Datsun Redi-Go photo gallery

[envira-gallery id=”7303″]

Exit mobile version