Home Auto News

ரெனோ க்விட் காரில் செடான் மற்றும் க்ராஸ்ஓவர்

ரெனோ க்விட் வெற்றியை தொடர்ந்து ரெனோ நிறுவனம் க்விட் காரினை அடிப்படையாக கொண்ட செடான் மற்றும் க்ராஸ்ஓவர் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. மேலும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட 1.0 லிட்டர் க்விட் , கிளைம்பர் மற்றும் ரேசர் மாடல்களும் வரவுள்ளது.

renault-kwid-climber

குறைந்த விலை காரினை தயாரித்து ரெனோ நிறுவனம் இந்தியாவில் வெற்றிக்கான வழியை தொடங்கியுள்ளது. மாருதி ஆல்ட்டோ மற்றும் இயான் போன்ற கார்களுக்கு போட்டியாக அமைந்த க்விட் மாடல் மிக சிறப்பான வெற்றி பெற்றுள்ளது.

ரெனோ நிசான் கூட்டணியில் உருவாகிய CMF-A தளத்தில் உருவாக்கப்பட்ட க்விட் காரினை அடிப்படையாக கொண்ட செடான் மற்றும் க்ராஸ்ஓவர் காரினை உருவாக்க உள்ளது. மேலும் ப்விட் காரினை அடிப்படையாக கொண்ட குறைந்த விலை எலக்ட்ரிக் காரும் தயாரிக்கப்பட உள்ளது.

1 லட்சத்துக்கு மேற்பட்ட முன்பதிவினை பெற்றுள்ள க்விட் காரில் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ளது. மேலும். ஏஎம்டி மாடலும் வரவுள்ளது.

CMF-A தளத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் மற்றொரு மாடலான டட்சன் ரெடி கோ கார் வரும் ஏப்ரல் 14 ந் தேதி சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

[envira-gallery id=”5787″]

Exit mobile version