Automobile Tamilan

ரெனோ க்விட் கார் – முழுவிபரம்

தொடக்க நிலை ரெனோ க்விட் கார் இந்த மாதம் விற்பனைக்கு வரவுள்ளது. ரெனோ க்விட் கார் ரூ.4 லட்சத்தில் விற்பனைக்கு வரவுள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ரெனோ க்விட் கார்
ரெனோ க்விட் கார்

மினி டஸ்ட்டர் போல காட்சியளிக்கும் க்விட் கார்  இந்திய வாடிக்கையாளர்களின் மனநிலையை உணர்ந்து நடுத்தர மக்களுக்கு ஏற்ற காராக தாயரிக்கப்பட்டுள்ளது.

  • முதற்கட்டமாக பெட்ரோல் என்ஜினில் வரவுள்ள க்விட் காரில் 54பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 799சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.
  • மிகவும் இலகு எடையாக காரின் மொத்த எடை வெறும் 600கிலோ மட்டுமே.
  • க்விட் காரின் கிரவுண்ட் கிளியரண்ஸ் எஸ்யூவி கார்களில் உள்ளதை போல 180மிமீ கொண்டுள்ளது.
  • மற்ற போட்டியாளர்களை விட கூடுதலான பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது. இதன் பூட் ஸ்பேஸ் 300லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும்.
  • 4மீட்டருக்குள் அமைந்துள்ள க்விட் காரின் நீளம் 3679 மிமீ , அகலம் 1579மிமீ மற்றும் உயரம் 1478மிமீ மேலும் இதன் வீல் பேஸ் 2422மிமீ ஆகும்.
  • ஸ்டான்டர்டு , RXE , RXL மற்றும் RXT என மொத்தம் 4 விதமான வேரியண்டில் கிடைக்கும்.
  • இதன் டாப் RXT வேரியண்டில் 7 இஞ்ச் அகலம் கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , யூஎஸ்பி , ஆக்ஸ மற்றும் பூளூடூத் இணைப்பினை பெற்றிருக்கும்.

 க்விட் வேரியண்ட் விபரம்

ரெனால்ட் க்விட் ஸ்டான்டார்டு
 
க்விட் பேஸ் வேரியண்டில்
  • கருப்பு நிற பம்பர்
  • ஸ்டீல் வீல் மற்றும் ஸ்பேர் வீல்
  • ஒற்றை வண்ண டேஸ்போர்டு
  • கிரே அப்ஹோல்ஸ்ட்ரி
  • ஹீட்டர் (ஏசி இல்லை)
  • 2 வருட துருபிடிக்காமல் இருக்கும் என்பதற்க்கான வாரண்டி
  • கியர் ஷிஃப்ட் இண்டிகேட்டர்

ரெனால்ட் க்விட் RXE

  • சில்வர் வண்ணம் கொண்ட ஸ்டீல் வீல்
  • பயணிகளுக்கான சன் வைசர்
  • என்ஜின் இம்மொபைல்சர்
  • ஏசி மற்றும் ஹீட்டர்
  • ஆடியோ தொடர்பு வசதிகள் ஆப்ஷனலாக பெறலாம்
ரெனால்ட் கிவிட் RXL
  • பாடி வண்ணத்தில் பம்பர்
  • ஆடியோ வசதிகள்
  • எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங்
  • கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் கலந்த அப்ஹோல்ஸ்டரி
  • பிரிமியம் முன்பக்க இருக்கைகள்
  • ஆட்டோ ஆன்/ஆஃப் கேபின் விளக்கு
ரெனால்ட் க்விட் RXT
  • இரட்டை வண்ண டேஸ்போர்டு
  • ஏசி நாப்களில் குரோம் பூச்சூ
  • ஓட்டுநருக்கான காற்றுப்பைகள் ஆப்ஷனல்
  • முன்பக்க பவர் வின்டோஸ்
  • மீடியா நேவ் பேக்
  • ரிமோட் கீலெஸ் என்ட்ரி மற்றும் சென்ட்ரல் லாக்கிங்
  • முன்பக்க பனி விளக்குகள்

ரெனோ க்விட் காருக்கு 2 வருடம் அல்லது 50,000கிமீ வரை வாரண்டி உள்ளது. இன்னும் சில தினங்களில் ரெனோ க்விட் விற்பனைக்கு வரவுள்ளது.

Renault Kwid Engine and Variant details

Exit mobile version