Automobile Tamilan

சாலைகளில் 1.30 லட்சம் ரெனோ க்விட் கார்கள்

கடந்த செப்டம்பர் 2015ல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த ரெனோ க்விட் அமோகமான வரவேற்பினை பெற்று 1.30 லட்சம் கார்க்களை விற்பனை செய்துள்ளது. க்விட் காரில் 0.8லி மற்றும் 1.0 லி பெட்ரோல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ரெனோ க்விட்

மினி சைஸ் எஸ்யூவி போன்ற தோற்ற அமைப்பினை கொண்ட ரெனோ க்விட் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிக வேகமாக பரவ தொடங்கியது. பல ஆண்டுகளுக்கு மேலாக முன்னனி வகித்த மாருதி ஆல்ட்டோ காரின் விற்பனையை புரட்டி போட்ட க்விட் கார் தொடக்கநிலை சந்தையில் முன்னணி மாடலாக வலம் வருகின்றது.

க்விட் காரில் 53.2 பிஎச்பி பவருடன் , 72 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 800சிசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 61 பிஎச்பி பவருடன் , 91 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 999சிசி பெட்ரோல் மாடல் என இருவிதமான மாடல்களிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்சை பெற்று விளங்குகின்றது. மேலும் 1 லி எஞ்சினில் ஏஎம்டி எனப்படும் ஈசி-ஆர் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.

ரெனோ நிறுவனத்தின் சென்னை ஒரகடம் ஆலையில் தயாரிக்கப்படுகின்ற க்விட் கார் 270 விற்பனை மையங்கள் வாயிலாக  நாடுமுழுவதும் விற்பனை செய்யப்படுகின்றது. 230 சர்வீஸ் மையங்களை ரெனோ பெற்றுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படுகின்ற க்விட் தென்ஆப்பரிக்கா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

Exit mobile version