இந்தியாவில் 98 சதவீதத்திற்க்கு அதிகமான பாகங்கள் உருவாக்கப்படுவதால் க்விட் காரின் விலை ரூ.3 லட்சம் முதல் 4 லட்சத்திற்க்குள் இருக்கும்.
க்விட் தோற்றம்
ரெனோ டஸ்ட்டர் காரின் சாயலில் அதன் சிறிய ரக கிராஸ்ஓவர் போல உள்ள ரெனோ க்விட் இந்திய வாடிக்கையாளர்களின் எஸ்யூவி கார்களின் மேல் உள்ள ஆர்வத்தினை வைத்து ரெனோ உருவாக்கியுள்ளது.
முகப்பில் உள்ள ஸ்ட்பல்டு கிரில் மற்றும் பாடி கிளாடிங் போன்றவற்றை கொண்டுள்ளது. முகப்பு விளக்கில் இன்டிக்கேட்டர் , வட்ட வடிவ பனி விளக்கு அறையில் கருப்பு வண்ண கவர் செய்யப்பட்டுள்ளது. வீல் ஆர்சுக்கு மேல் கொடுக்கப்பட்டுள்ள இன்டிகேட்டர் தந்துள்ளனர்.
பக்கவாட்டில் கருப்பு நிற கிளாடிங் , கதவு கைப்பிடிகள் மற்றும் ரியர் வியூ மிரர் பாடி கலரில் இல்லை. பின்புறத்திலும் நல்ல அமைப்பினை கொண்டுள்ளது.
க்விட் இன்டிரியர்
க்விட் காரில் 7 இஞ்ச் தொடுதிரை மீடியா நேவ் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இதில் பூளூடூத் , ரேடியோ மற்றும் நேவிகேஷன் அமைப்பு போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இடவசதி மற்றும் பூட் வசதியும் சிறப்பாக உள்ளது.
க்விட் என்ஜின்
ரெனோ க்விட் காரில் 57எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 800சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் என தெரிகின்றது.
ரெனோ க்விட் போட்டியாளர்கள்
மாருதி ஆல்ட்டோ கே10 ,வேகன் ஆர் மற்றும் ஹூண்டாய் இயான் போன்ற கார்களுக்கு சவாலினை க்விட் கார் தரவுள்ளது.
ரெனோ க்விட் விலை ரூ.3 முதல் 4 லட்சத்திற்க்குள் இருக்கும்.
வருகை ; செப்டம்பர் முதல் நவம்பர்
ஆட்டோமொபைல் தமிழன் பார்வை
ரெனோ க்விட் கார் இந்திய மக்களின் தொடக்க வரவேற்ப்பினை பெற்றுள்ள நிலையில் அதன் தோற்றம் மற்றும் விலை போன்ற அம்சங்களும் கவர்ந்துள்ளது. மிக வலிமையான போட்டியாளர்களுடன் மோதவுள்ளதால் க்விட் ரெனோ டீலர்களின் தரமான சேவையில்தான் இனி சந்தையை வெல்லுமா என தெரியும்.
Upcoming Renault Kwid details