Automobile Tamilan

ரெனோ க்வீட் கார் அறிமுகம்

ரெனோ நிறுவனத்தின் மிக ஸ்டைலான க்வீட் கார் இன்று சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெனோ தலைமை செயல் அதிகாரி கார்லோஸ் கோஸ்ன் அறிமுகம் செய்துள்ளார்.
என்ட்ரி லெவல் சிறிய காரான க்வீட் கார் ரூ.3 லட்சத்தில் இருந்து 4 லட்சத்திற்க்குள் இருக்கும்.
ரெனோ க்வீட் கார்

ரெனோ – நிசான் கூட்டனியின் சிஎம்ஃப்ஏ  தளத்தில் (CMF-A Platform) உருவாக்கப்பட்டுள்ள முதல் காரான க்வீட் மிகவும் சிறப்பான கட்டமைப்பினை வெளிப்படுத்துகின்றது.
இந்த புதிய தளத்தின் நோக்கம் 20-30 சதவீதம் வரை செலவினை குறைக்கும் வகையில் வடிவமைத்துள்ளனர்.
மிகவும் சிறப்பான க்ராஸ்ஓவர் கார்களின் தோற்றம் கொண்டுள்ள க்வீட் வலுவான அடிதளத்தினை அமைக்கும்.

98 சதவீத்திற்க்கு அதிகமான பாகங்கள் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படுவதால் இந்த காரின் வருகையால் மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் மிக கடுமையான சவாலினை சந்திக்க உள்ளது.

தோற்றம்

கம்பிரமான முகப்பு தோற்றத்தினை கொண்டுள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் மனதினை அறிந்து மிகவும் சிறப்பான வடிவத்துடன் கூடிய முப்பரிமான கிரிலில் ரெனோ இலச்சினை பதிக்கப்பட்டுள்ளது.

முகப்பு விளக்கு அறையிலே இன்டிக்கேட்டர் விளக்குகள் , பனி விளக்குகளை சுற்றி கருப்பு ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

பக்கவட்டில் மிகவும் ஸ்டைலிசான கோடுகள் மற்றும் கருப்பு கிளாடிங் இணைக்கப்பட்டுள்ளது  சாதரன ஸ்டீல் ரிம் வீல்களை கொண்டுள்ளது. வீல் ஆர்ச் கொடுக்கப்பட்டுள்ளது. கதவு கைப்பிடிகள் பாடி கலரில் இல்லை. காற்றுப்பைகள் ஆப்ஷனலாக டாப் வேரியண்டில் கிடைக்கும்.

பின்புறத்தில் உள்ள நிறுத்த விளக்குகள் மற்றும் டெயில் கேட் முகப்பிற்க்கு இனையாக உள்ளது. மொத்தத்தில் ரெனோ க்வீட் மினி டஸ்ட்டர் போன்று தெரிகின்றது.

உட்புறம்

நவீன காலத்தினை உணர்ந்த பல நவீன அம்சங்களை இணைத்துள்ளது. குறிப்பாக 7 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோன்டெயின்மென்ட் ,டிஜிட்டல் மீட்டர் சென்ட்ரல் கன்சோல் என பல அம்சங்களை கொண்டுள்ளது.

..

என்ஜின் விவரங்ள் இன்னும் வெளியிடவில்லை. 800சிசி மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும் மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பயன்படுத்த உள்ளனர். வரும் செப்டம்பர் முதல் நவம்பர் இடையிலான காலகட்டத்தில் விற்பனைக்கு வரும்.

Renault unveil global entry-level car Kwid in chennai

Exit mobile version