Automobile Tamilan

ரெனோ நிசான் 10 ஆட்டோமேட்டிக் கார்களை களமிறக்குகின்றது

வரும் 2020ஆம் ஆண்டிற்குள் ரெனோ நிசான் கூட்டனியில் 10 ஆட்டோமேட்டிக் கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இவை ஜப்பான் அமெரிக்கா , ஐரோப்பா மற்றும் சீனா  போன்ற நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்கின்றது.

Nissan-IDS-Concept
நிசான் IDS கார்

வரவிருக்கும் நவீன கார்களில் மிக சிறப்பான நுட்ப வசதிகளுடன் வேலை , பொழுதுபோக்கு மற்றும் சமூகம் போன்றவற்றுடன் இணைந்திருக்கும் வகையிலும் மிக சவாலான விலையிலும் இந்த கார்கள் இருக்கும் என ரெனால்ட்-நிசான் தெரிவித்துள்ளது.

எந்த மாடல்கள் வரும் என்பது போன்ற விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. கடந்த டோக்கியோ ஆட்டோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட நிசான் IDS மாடல் அடுத்த தலைமுறை நிஸ்ஸான் லீஃப் காராக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

ரெனோ நிசான் இரண்டு முக்கிய அம்சஙகளுக்கு மிகுந்த முக்கியம் கொடுத்து வருங்கால மாடலை உருவாக்கும். அவை ஜீரோ எமிசன் அதாவது சுற்றுச்சூழலை மாசுப்படுத்தாத கார் மற்றும் ஜீரோ ஃபேடலிட்டில் அதாவது விபத்து என்பது இல்லாத வகையில் கார்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளதாக ரெனோ நிசான் கூட்டனி தலைவர் கார்லஸ் கோஷன் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தில் ஒரு லேனில் தானியங்கி முறையில் நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து நெரிசலிலும் செயல்படும் வகையிலும் அடுத்த வருடத்தில் மல்டி லேன் தானியங்கி முறை மற்றும் நெடுஞ்சாலையில் தானாக இயங்கும் வகையில் மாடல்கள் விற்பனைக்கு வரலாம். இதுபோல அடுத்தடுத்த வருடங்களில் நவீன நுட்பங்களை மேம்படுத்தி முழுமையான தானியங்கி காரை விற்பனைக்கு கொண்டு வர ரெனோ-நிசான் திட்டமிட்டுள்ளது.

தொடர்புடையவை ; நிசான் ஐடிஎஸ் கார் கான்செப்ட்

Exit mobile version