ரோல்ஸ் ராய்ஸ் டான் சொகுசு கார் அறிமுகம்

ரோல்ஸ் ராய்ஸ் டான் சொகுசு கன்வெர்ட்டிபிள் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  சொகுசு கார்களின் உச்சகட்டமாக ரோல்ஸ் ராய்ஸ் டான் பல நவீன அம்சங்களை கொண்டு விளங்கும்.
ரோல்ஸ் ராய்ஸ் டான்
ரோல்ஸ் ராய்ஸ் டான்
ஒரே சமயத்தில் உலகம் முழுதும் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரோல்ஸ் ராய்ஸ் டான்  காரில் உட்புறத்தை படத்தில் பாருங்கள் எவ்வளவு நேர்த்தியாக மனதை கொள்ளையடிக்கும் அழகியாக விளங்குகின்றது. கன்வெர்டிபிள் எனப்படும் திறந்த கூரை அமைப்பினை கொண்ட மாடலாக விளங்குகின்றது
டான் சொகுசு காரின் தோற்றம் ரயீத் போன்றே அமைந்திருந்தாலும் பல மாறுதல்களை பெற்றுள்ளது. குறிப்பாக காரின் முகப்பு விளக்கு எல்இடி அம்சங்களுடன் விளங்குகின்றது. முகப்பு விளக்கில் RR என ரோல்ஸ்ராய்ஸ் லோகோ எல்இடி கொண்டு மிக நேர்த்தியாக உருவாக்கியுள்ளனர்.
 ஸ்ஃபாட் டாப் கூரையானது மிக இயல்பாக மடங்கி விரியும் வகையில் அமைந்துள்ளது. பக்கவாட்டில் உள்ள 21 இஞ்ச் பாலீஷ்  வீல் மற்றும் 20 ” , 21இஞ்ச் என இரண்டு அளவுகளிலும் பெயின்ட் செய்யப்பட்ட வீல்கள் வாடிக்கையாளரின் விருப்பத்திற்க்கு ஏற்ப கிடைக்கும்
உட்புறத்தில் மிகவும் கிளாசிக் தோற்றுத்துடன் விளங்கும் மரவேலைப்பாடுகள் , உயர்தர லெதர் இருக்கைகள் , என ஓட்டுமொத்த உட்புறத்திலும் கவர்ந்திழுக்கும் வண்ணத்தில் மிக அழகாக காட்சியளிக்கின்றது. 
தனிதனியான 4 இருக்கைகள் , டோர் பேட்கள் போன்றவற்றில் மரவேலைப்பாடுகள் , 10.25 இஞ்ச் அகலம் கொண்ட பல பயன்களை தரும் மல்டிமீடியா அமைப்பு உள்ளது. இதில் உள்ள நேவிகேஷன் அமைப்பு நமக்கு தேவையான வழிதடங்களின் விபரங்களை மிக வேகமாகவும் துல்லியமாகவும் வழங்கும்.

லார்ஜர் தென் லைவ் ( larger than live )என அழைக்கப்படும் 16 ட்யூன்டு ஸ்பீக்கர்களை பொருத்தியுள்ளனர் . பூட்டில் இரண்டு பேஸ் ஸ்பீக்கர்களும் 7 ட்வீட்ர்கள் கேபினில் உள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் ரயீத் காரை அடிப்படையாக கொண்ட டான் காரில் 563பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த V12 சிலிண்டரை கொண்ட 6.6 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 780என்எம் ஆகும். 
ரயீத் காரில் உள்ளது போலவே ZF- 8 வேக கியர்பாக்ஸ் உள்ளது. இந்த கியர்பாக்ஸ் செயல்பாடானது ஜிபிஎஸ் உதவியுடன் சாலை ஸ்கேன் செய்து அதற்கேற்ப தானாகவே கியர்களை மாற்றி கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகும்.

ரோல்ஸ் ராய்ஸ் டான் கார் உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ ஆக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது . 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு வெறும் 4.9 விநாடிகள் மட்டுமே எடுத்து கொள்ளும்.

ரோல்ஸ் ராய்ஸ் டான் கியர்

பல விதமான பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருக்குக்கும் ரோல்ஸ் ராய்ஸ் டான் கார் ஒரு வேளை தலைகீழாக கவிழ்ந்தால் கண் இமைக்கும் நொடிக்குள்ளாக தலைக்கான பாதுகாப்பு அம்சங்கள் செயல்பட தொடங்கி விடும்.

ரோல்ஸ் ராய்ஸ் டான் முகப்பு விளக்கு

ரோல்ஸ் ராய்ஸ் டான்
வரும் பிராங்பேர்ட் ஆட்டோ ஷோவில் ரோல்ஸ் ராய்ஸ் டான் காட்சிக்கு வரவுள்ளது. 

[youtube https://www.youtube.com/watch?v=Nx4bkvqoU4U]

ரோல்ஸ்ராய்ஸ் டான்

Rolls-Royce Dawn Unveiled

Exit mobile version