லம்போர்கினி இகோஸ்டா கான்செப்ட் கார்

0
லம்போர்கினி நிறுவனத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இகோஸ்டா என்ற கான்செப்ட் காரை அறிமுகம் செய்துள்ளது. இகோஸ்டா என்பதற்க்கு பொருள் சுயநலமாகும். இந்த காரில் ஒருவர் மட்டுமே பயணிக்க முடியும்.

Lambhorgini Egoista
தனிநபர் மிக சிறப்பான அனுபவத்தினை இகோஸ்டா கார் மூலம் பெற முடியும். எனவேதான் இதன் பெயர் இகோஸ்டா. மேலும் இகோஸ்டா ஜெட் விமானங்களின் அடிப்படை மற்றும் தரைவழி வாகனங்களின் நோக்கத்தினை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது  என ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் தலைமை வடிவமைப்பாளர் வாட் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் இருக்கை வடிவமைப்பானது தனிநபர் மட்டும் பயணிக்கும் வடிவில்தான் இருக்க வேண்டும் என்பதில் திட்டமிட்டு வடிவமைத்துள்ளனர். இதன் பாடி கார்பன் ஃபைபர் மற்றும் அலுமினியம் போன்ற பொருட்களால் மட்டும் உருவாக்க உள்ளனர்.
Lambhorgini Egoista
இகோஸ்டாவில் 5.2 லிட்டர் வி10 எஞ்சின் பொருத்தப்படும். இதன் ஆற்றல் 600எச்பி வரை வெளிப்படுத்தும். இதன் உட்ப்புறம் மற்றும் வெளிப்புறத்தில் மிக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த உள்ளனர்.
லம்போர்கினி நிறுவனத்தின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தில் இகோஸ்டா கான்செப்ட் அறிமுகம் செய்துள்ளனர்.
லம்போர்கினி இகோஸ்டா