லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் LP610-4 விரைவில்

0

லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைட்ர் கன்வெர்டிபிள் காரை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர லம்போர்கினி திட்டமிட்டுள்ளது. லம்போர்கினி ஹூராகேன் ரியர் வீல் டிரைவ் மாடல் சில நாட்களுக்கு முன் விற்பனைக்கு வந்தது.

lamborghini-huracan-teaser

Google News

மேற்கூரை இல்லாத கன்வெர்டிபிள் மாடலான ஹூராகேன் ஸ்பைடர் சூப்பர் காரில் 610 பிஎஸ் ஆற்றலை வழங்க கூடிய வி10 5.2 லிட்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 560என்எம் ஆகும். இதில் 7 வேக டியூவல் கிளட்ச் பயன்படுத்தப்பட்டுள்ளது.

0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 3.2 விநாடிகள் எடுத்துக்கொளும். லம்போர்கினி ஹூராகேன் ஸ்பைடர் LP610-4 காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 324கிமீ ஆகும்.

ஹூராகேன் ஸ்பைடர்  LP610-4 காரிலுள்ள மேற்கூறையானது 50கிமீ வேகத்திற்க்குள் செல்லும்பொழுது வெறும் 18 விநாடிகளில் மூடிக்கொள்ளும். கார்பன் ஃபைபர் மற்றும் உறுதியான அலுமினியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

லம்போர்கினி டெல்லி ஷோரூம் அதிகார்வப்பூர்வ பக்கத்தில் டீசர் வெளியிடப்பட்டுள்ளதால் இன்னும் ஒரு சில நாட்களில் விற்பனைக்கு வரவுள்ளது.